டிரம்பை விவாகரத்து செய்துவிடுவார் மெலனியா... Ex உதவியாளர்கள் பகிர்ந்த ஷாக் தகவல்.. இது என்ன சோதனை..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவியதால் டிரம்பை அவரது மனைவி மெலனியா விரைவில் விவாகரத்து செய்துவிடுவார் என வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்று இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கும் டிரம்புக்கு இது அடுத்த அதிர்ச்சியாக கருதப்படுவதுடன், இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கும் மெலனியாவுக்கும் 25 வயது வித்தியாசம் உள்ள நிலையில் அவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் டிரம்ப். இருவருக்கும் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவ்வப்போது அவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படும். இதனை இப்போது உலா வந்துகொண்டிருக்கும் டிரம்ப் மீம்ஸ் வீடியோக்களில் பார்த்தால் கூட புரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர்கள் ஸ்டீபனி வோல்கோஃப் மற்றும் ஓமரோசா மனிகவுல்ட் ஆகிய இருவரும் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளனர். அதாவது, டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக மெலனியா காத்திருப்பதாகவும் வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியவுடன் மெலனியா விவாகரத்து பெற்றுவிடுவார் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், டிரம்ப்-மெலனியா தம்பதியின் மகனான பாரனுக்கு சொத்தில் சம்பங்கை வழங்க மெலனியா வலியுறுத்தி வருகிறார் என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் கைகளில் இருந்து அதிகாரம் எப்போது செல்கிறதோ அப்போதே மெலனியாவும் பிரிந்து சென்றுவிடுவார் எனக் கூறியுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர்கள் இவ்வாறு கூறியிருப்பது அமெரிக்காவில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே டிரம்ப்-மெலனியா குடும்ப வாழ்க்கை பற்றி அவர்கள் தரப்பில் இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications