கோட் சூட்டை கழட்டி வைத்துவிட்டு.. அடிதடியில் இறங்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்! பரபர
வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான மார்க் ஜுக்கர்பெர்க் சண்டையிடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்கியது மார்க் ஜூக்கர்பெர்க் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கல்லூரியில் படித்த போது கடந்த 2004ஆம் ஆண்டு பேஸ்புக்கை தொடங்கினார்.
ஆரம்பித்த உடனேயே அது மெகா ஹிட் அடித்தது. முதலில் அமெரிக்காவில் இருந்த பேஸ்புக், வெகு விரைவிலேயே உலகம் முழுக்க பரவியது. இப்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் எனப் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது.

மார்க் ஜூக்கர்பெர்க்: இப்படிப் பல வெற்றிகரமான நிறுவனங்களை மார்க் ஜூக்கர்பெர்க் நடத்தி வருகிறார். இதன் மூலம் சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மார்க் ஜூக்கர்பெர்க் இருக்கிறார். இதற்கிடையே அவரது வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் கோட் சூட்டை கழட்டி வைத்து அதிரடியாகச் சண்டையிடும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Mark Zuckerberg jiujitsu match last Saturday. He showed great heart 👏 pic.twitter.com/w9smXRVhTG
— Luca Atalla (@lucaatalla) May 8, 2023
ஏற்கனவே கடந்த ஆண்டு, மார்க் ஜூக்கர்பெர்க், தனது மார்ஷல் ஆர்ட்ஸ் திறன்களைக் காட்டியிருந்தார். அவர் எம்எம்ஏ ஃபைட்டர் கை ஹூவுடன் தீவிர பயிற்சியில் ஈடுபடுவது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. அதில் தற்காப்பு மற்றும் பதில் தாக்குதல் அளிக்கும் முறைகளை அவர் பயிற்சி எடுத்து வருவது தெளிவாக தெரிந்தது. அந்த வீடியோ இணையத்தில் உடனடியாக டிரெண்டானது.
வெற்றி: பல புகழ்பெற்ற எம்எம்ஏ போட்டியாளர்கள் மார்கை இதற்காகப் பாராட்டி இருந்தனர். இதனிடையே இப்போது மீண்டும் மற்றொரு வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது பேஸ்புக் நிறுவனரின் முதல் புரோபஷனல் போட்டி ஆகும்.
Mark Zuckerberg complains to referee after losing jiu-jitsu contest pic.twitter.com/1CvvmdQw8J
— The Independent (@Independent) May 8, 2023
38 வயதான மார்க், கடந்த வாரம் கலிபோர்னியாவில் தனது முதல் எம்எம்ஏ தொடரில் கலந்து கொண்டார். தனது ஜியு-ஜிட்சு அணியான கொரில்லா சார்பில் களமிறங்கிய அவர், பதக்கங்களையும் வென்றார்.
இது குறித்த படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், "எனது முதல் ஜியு ஜிட்சு போட்டியில் பங்கேற்று கொரில்லா ஜியு ஜிட்சு அணிக்காக சில பதக்கங்களை வென்றேன். எனக்குப் பயிற்சி அளித்த டேவ் கேமரில்லோ, கை வூ மற்றும் ஜேம்ஸ் டெர்ரிக்கு நன்றி! " என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த போட்டோவும் சண்டை போடும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதீத ஆர்வம்: 2022ஆம் ஆண்டு அவரது முதல் எம்எம்ஏ பயிற்சி வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இருப்பினும், அதற்கு முன்னரும் கூட அவர் எம்எம்ஏ விளையாட்டின் மீது எந்தளவுக்கு மரியாதை வைத்துள்ளார் என்பதைப் பல முறை அவர் காட்டியுள்ளார்.
கொரோனா காலத்தில் ஊடரங்கு காலத்தைப் பயன்படுத்தி புதிய விளையாட்டை கற்றுக் கொண்டதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் தான் அவர் தான் UFC பயிற்சியை ஆரம்பித்திருந்தார்.
கடந்த செப்டம்பரில் மில்டன் கெய்ன்ஸில் நடந்த தனி போட்டிகள் அனைத்திலும் மார்கெ ஜூக்கர்பெர்க் வெற்றி பெற்றிருந்தார். இது அவர் இந்த UFC போட்டிகளை எந்தளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications