"ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.." FBI தலைவரானாலும் பூர்வீகத்தை மறக்காத காஷ் படேல்.. பெற்றோருக்கு மரியாதை
வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குநராக காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பான கான்பர்மேஷன் ஹியரிங் நடைபெற்றது. அதில் காஷ் படேல் செய்த செயலும் அவரது பேச்சும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒருவர் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் பூர்வீகத்தை மறக்கக்கூடாது என்பதையே காட்டுவதாக அவரது செயல் உள்ளதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப் வரிசையாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். பல அரசு அமைப்புகள், நிர்வாகங்களை அவர் மொத்தமாக மாற்றி அமைத்து வருகிறார்.

எஃப்பிஐ அமைப்பு:
அதன்படி அமெரிக்காவின் மிக முக்கிய உளவு அமைப்பான எஃப்பிஐ அமைப்பையும் மாற்றி அமைக்க விரும்பினார். இதற்காக அதன் தலைவராக காஷ் படேலை டிரம்ப் நியமித்தார். அந்நாட்டு சட்டப்படி காஷ் படேல் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக ஒரு சிறு கன்பர்மேஷன் ஹியரிங் நடைபெறும். அதன்படி காஷ் படேலுக்கும் கன்பர்மேஷன் ஹியரிங் நடந்த நிலையில், அதில் அவரது செயல்கள் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
பாதங்களைத் தொட்டு வணங்கிய காஷ் படேல்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் சமீபத்தில்தான் அங்குள்ள செனட் நீதித்துறைக் குழுவின் முன் ஆஜராகி, எஃப்.பி.ஐ அமைப்பில் செய்யத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். காஷ் படேல் என்னதான் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரது பெற்றோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஹியரிங்கிற்கு முன்பு காஷ் படேல் தனது பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
This is ❤️ - surely this is for the first time that anyone inside that Congressional hearing chamber touched anyone’s feet to pay his/her respects… notice how @Kash_Patel touched feet of his parents as soon as he entered for his confirmation hearing!
— Alok Bhatt (@alok_bhatt) January 30, 2025
Sanskaar! pic.twitter.com/tIDqS3WVB0
இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. காஷ் படேல் எவ்வளவு உயரம் சென்றாலும் தனது பூர்வீகத்தை மறக்கவில்லை என்பதையே இது காட்டுவதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேபோல காஷ் படேலின் மற்றொரு வீடியோவும் இணையத்தில் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதாவது தனது உரையைத் தொடங்கும் போது குடும்பத்தினர்க்கு நன்றி சொல்லிவிட்டுப் பேசத் தொடங்கிய காஷ் படேல், "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா" என்றும் குறிப்பிட்டார். இதையும் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா:
தனது பேச்சியைத் தொடங்கிய படேல், "இன்று இங்கு அமர்ந்திருக்கும் என் அப்பா பிரமோத் மற்றும் அம்மா அஞ்சனாவை வரவேற்க விரும்புகிறேன். அவர்கள் இதற்காக மட்டும் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர்கள். என் சகோதரி நிஷாவும் இங்கே இருக்கிறார். அவளும் என்னுடன் இருக்க இங்கு வந்துள்ளார். நீங்கள் இங்கே வந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.!

அவர்களின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் இடைவிடாத அன்பு இல்லாமல் என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குநராக என்னை நியமிக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் என்னிடம் தெரிவித்தபோது, அது மிகப் பெரிய கவுரவமாகவே கருதினேன்.
டிரெண்டிங்:
என் அம்மா முதலில் தான்சானியாவைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவில் படித்தார். அப்போது தான் எனது தந்தையைச் சந்தித்து, இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் அவர்கள் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தனர். அங்குதான் நான் பிறந்தேன்.. எனது தந்தையின் ஏழு சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் ஒன்றாகவே இருந்தோம்" என்று அவர் தனது குடும்பத்தினர் குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளைக் கூறினார். இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
Jai Shri Krishna…….
— Alok Bhatt (@alok_bhatt) January 30, 2025
How @Kash_Patel began his speech at his congressional hearing after first introducing his parents and sister from India….. pic.twitter.com/U9ateObPvS
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன?











Click it and Unblock the Notifications