வாஷிங்டன் நகருக்குள் திடீரென புகுந்த விமானம்.. எச்சரிக்கை ஒலியுடன் விரட்டிய போர் விமானம்.. என்னாச்சு
வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் விமானம் ஒன்று எந்த வித தகவலும் தெரிவிக்காமல் திடீரென நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விமானத்தை போர் விமானம் விரட்டிய நிலையில், விமானம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோத வைத்து பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவில் தனி நபர் விமானங்களுக்கு பறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விமானம் ஒன்று திடீரென புகுந்தது.

இரண்டு என்ஜின்கள் கொண்ட செஸ்னா ரக விமானத்தை தொடர்பு கொண்ட போது எந்த ஒரு ரெஸ்பான்சும் கிடைக்கவில்லை. உடனடியாக அமரிக்காவின் போர் விமானங்கள், செஸ்னா விமானத்தை விரட்ட தொடங்கிது. போர் விமானம் செல்லும் போது எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்பட்டதால் வாஷிங்டன் நகர மக்கள் அதிர்ந்தனர்.
விமானம் வாஷிங்டன் நகரத்தை விட்டு செல்லும் வரையில், வெள்ளை மாளிகை அமைந்துள்ள இடங்கள் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டு இருந்தது. வாஷிங்டன் நகருக்குள் உரிய பதில் எதுவும் இன்றி பறந்து பரபரப்பை ஏற்படுத்திய செஸ்னா விமானம் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
வாஷிங்டன்னுக்கு தென்மேற்கே 100 மைல் தொலைவில் இந்த விபத்து நடைபெற்றது. விமானம் விபத்துக்கு உள்ளாகும் வரை வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கமாண்ட், செஸ்னா விமானத்தின் விமானியை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செஸ்னா விமானத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒளி கீற்றைகளையும் NORAD அடிக்க முயற்சித்தது.

ஆனால் இதற்கும் எந்த பலனும் கிட்டவில்லை. விமானம் தொடர்ந்து சென்று விபத்தில் போய் சிக்கியது. விர்ஜினியாவின் மேண்டேபெல்லா பகுதியிலுள்ள மலைப்பகுதியில் செஸ்னா விமானம் விபத்தில் சிக்கியதாக அமெரிக்காவின் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகமும் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான செஸ்னா விமானம் எலிசெபதெத்டன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும் நியூயார்க்கில் உள்ள மெக் ஆர்தர் விமான நிலையத்திற்கு விமானம் சென்றதாகவும் அமெரிக்காவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications