வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் முதல் பலி.. முதியவர் இறப்பால் பரபரப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வுகானில் இருந்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவை மட்டுமின்றி உலகம் முழுமையும் கடுமையாக இந்த வைரஸ் நோய் பரவி வருகிறது.

First death for Corona virus in United States

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் 79,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன்னில் சியாட்டில் பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

English summary
First death for Corona virus in United States. As the virus spreads more than 60 countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X