முதல் "முத்தம்.." பெண்ணுக்கு ஆண் கொடுத்த முதல் கிஸ் எங்கு எப்போது தெரியுமா.. அடடே சுவாரசியம்
வாஷிங்டன்: மனிதர்களால் பதிவு செய்யப்பட்ட முதல் முத்தம் குறித்து சில சுவாரசியமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"முத்தம்" அன்பை வெளிப்படுத்தும் ஒரு மிகச் சிறந்த வழியாகும். உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே முத்தத்தைக் காட்டியிருப்பார்கள்.

முத்தத்தில் பிரஞ்சு முத்தம், பறக்கும் முத்தம், கன்னத்தில் முத்தம் என பல்வேறு வகையான முத்தங்கள் இருக்கிறது. ஆனால், முதன்முதலில் மனிதர்கள் பதிவு செய்த முத்தம் எது என்று தெரியுமா. அது குறித்த சுவாரசிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
முதல் முத்தம்: இது மனிதர்கள் பதிவு செய்த முதல் முத்தம் எனக் கருதப்படுகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த முத்தம் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை "முதல் முத்தம்" என்பது 3,500 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என ஆய்வாளர்கள் நினைத்த நிலையில், அதை விட 1,000 ஆண்டுகள் பழமையான இதை இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
மெசபடோமிய சமூகத்தில் சிலவற்றில் முத்தமிடும் முறை நடைமுறையில் இருந்துள்ளது. கி.மு. 2500இல் இருந்தே பண்டைய நூல்களில் முத்தங்களை அவர்கள் ஆவணப்படுத்தியதற்கான ஆதாரங்களை உள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாய்வழி பரவும் நோய்கள் பரவ முத்தம் காரணமாக இருந்து இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்.
முத்தம் எதற்கு: நட்பு ரீதியாக முத்தமிடுவது என்பது பல காலமாக உலகெங்கும் மனிதர்களுக்கு இடையே பழக்கத்தில் இருந்து இருக்கிறது. ஆனால், பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முத்தம் என்பது கடந்த காலங்களில் உலகெங்கும் இருந்தது இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் முத்தம் என்பது கிறிஸ்துவ பிறப்பிற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதினார். ஆனால், இப்போது முத்தம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத்தில் இருந்து தோன்றியிருக்கும் எனச் சொல்ல முடியாது என்றும் பல கலாச்சாரங்களிலும் முத்தமிடும் பழக்கம் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எங்குத் தோன்றியது: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நமக்கு இப்போது கிடைத்த சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது முத்தம் குறிப்பிட்ட இடத்தில் அல்லது கலாச்சாரத்தில் தோன்றிய ஒன்று என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல முத்தம் என்பது கடந்த காலங்களில் நட்பை வெளிப்படுத்தவும் சரி, காதலை வெளிப்படுத்தவும் சரி பயன்பட்டுள்ளது.
நீங்கள் போனோபோஸ் குரங்குகளைப் பார்த்தீர்கள் என்றால் அவை காதலை வெளிப்படுத்த பாலியல் நோக்கத்துடன் முத்தமிடும். அதேநேரம் சிம்பன்சிகள் தங்கள் குழுவில் இணக்கமான உறவைக் கொண்டிருக்க முத்தமிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இவை இரண்டுமே மனிதர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டவை என்பதால் இது முக்கியமானது. இவை மனிதர்களின் நடத்தை மற்றும் பரிணாமத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது.
மேலும், இவை பண்டைக் காலத்தில் அறிந்தோ அறியாமலோ ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் 1 (HSV-1) போன்ற கிருமிகள் பரவ காரணமாக இருந்து இருக்கலாம். இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது" என்றார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications