திடீரென கப்பலுக்குள் தாவிய திமிங்கலம்.. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி! ஈரக்குலையே நடுங்குதே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீன்பிடி கப்பலில் கடலுக்குள் சென்று 2 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களின் கப்பலுக்குள் திமிங்கலம் தாவிய வீடியோ அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடலுக்குள் திமிங்கலம், சுறா போன்ற பெரிய உருவம் கொண்ட மீன்கள் வசித்து வருகின்றன. இந்த திமிங்கலம், சுறா உள்ளிட்டவை கடலின் அனைத்து பகுதிகளிலும் வசிப்பது இல்லை. குறிப்பிட்ட சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இருப்பினும் சில நேரங்களில் இந்த திமிங்கலம், சுறா மீன்கள் அவ்வப்போது கரை அருகே வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளன.

us america

இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ஒரு திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடலில் சென்ற மீன்பிடி படகுக்குள் திமிங்கலம் தாவிய நிலையில் அந்த கப்பலே தண்ணீருக்குள் கவிழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள கடலில் நடந்துள்ளது. ஒடியார்னி பாயிண்ட் ஸ்டேட் பார்க் அருகே
உள்ள கடற்கரையில் இருந்து 2 பேர் மீன்பிடி படகில் கடலுக்குள் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் அங்கு வந்த திமிங்கலம் திடீரென்று தண்ணீருக்கு மேல் எழும்பி மீன்பிடி படகின் ஒரு பகுதியில் தாவியது. இந்த திமிங்கலம் மிகவும் ஆக்ரோஷமாக மீன்பிடி படகின் மீது தாவியதால் கண்இமைக்கும் நொடியில் மீன்பிடி படகு தண்ணீருக்குள் கவிழ்ந்தது.

இதனால் திமிங்கலமும் தண்ணீருக்குள் விழுந்து வேகமாக சென்றுவிட்டது. இதனை அருகே இன்னொரு கப்பலில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் கப்பல் கவிழ்ந்த இடத்துக்கு சென்று தண்ணீருக்குள் தத்தளித்த 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் 2 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே தான் சம்பவம் நடந்தபோது அங்கிருந்தவர்கள் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரகிறது. இதுபற்றி அமெரிக்க கடலோர காவல்படையினர் கூறுகையில், ‛‛நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் கடலில் மீன்பிடி படகில் மீன்பிடிக்க 2 பேர் சென்றனர். அப்போது திமிங்கலத்தின் தாக்குதலால் கப்பல் கவிழ்ந்துள்ளது.

கப்பல் கவிழ்ந்த நேரத்தில் அங்கு இன்னொரு கப்பலில் இருந்தவர்கள் 2 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் திமிங்கலங்களின் நடமாட்டம் இருப்பது பற்றி உடனடியாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கடலுக்குள் கவிழ்ந்த கப்பலும் மீட்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+