சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பப்புவா நியூ கினியா! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்.. மக்கள் பீதி
வாஷிங்டன்: பப்புவா நியூ கினியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் குலுங்கின. 5 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா.. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் புவியியல் அமைப்பு கொண்ட இடத்தில் பப்புவா நியூ கினியா நாடு அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது என்பது சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும், அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்திவிடுகிறது.

அந்த வகையில், பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு வீடுகள் குலுங்கின. பப்புவா நியூ கினியாவில் உள்ள கிழக்கு செபிக் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள மீட்பு பணிக்காக மீட்பு குழுவினரும் அங்கு முகாமிட்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறினர். ஏற்கனவே முழங்கால் அளவுக்கு சூழ்ந்துள்ள வெள்ளத்தில் மிதந்த வீடுகள், நிலநடுக்கத்தால் கடுமையாக உருக்குலைந்து கிடக்கும் காட்சிகள் அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
செபிக் ஆற்றில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மாகாண போலீஸ் தளபதி கிறிஸ்டோபர் தமாரி இது தொடர்பாக கூறுகையில், "தற்போது வரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications