"அப்டேட் வந்தாச்சு.."முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்! சரி செய்வது எப்படி! சிஇஓ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம் திடீரென முடங்கியதால் உலகெங்கும் பல்வேறு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிரச்சினையைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி இருப்பதாகவும் அதற்கான அப்டேட்டையும் வெளியிட்டு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட் ஸ்டிரைக் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்சினையைச் சரி செய்யும் வழிமுறை குறித்து இந்தியக் கணினி அவசரநிலைப் பதில் குழுவும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்யும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

விளக்கம்: இதற்கிடையே இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் முதல்முறையாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சரியாக க்ரவுட்ஸ்டிரைக்கின் 'Falcon Sensor'ல் கொடுக்கப்பட்ட அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் தனிமைப்படுத்தப்பட்டு, அதைச் சரி செய்ய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையால் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு சேவைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள், சூப்பர் மார்கெட்கள், விமானச் செயல்பாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சிக்கல்: இந்த அப்டேட் சிக்கலால் பயனர்கள் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் என்ற சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.. இந்த அப்டேட்டிற்கு பிறகு அவர்களது கணினியில் திடீரென சிக்கல் ஏற்படுகிறது. சிஸ்டம் ஆஃப் ஆகி அல்லது ரிஸ்டார்ட் ஆகிறது. இருப்பினும், அது ஆன் ஆவதில்லை. மாறாக "Your device ran into a problem and needs to restart. We're just collecting some error info, and then we'll restart for you" என்றே வருகிறது.
க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ: இது தொடர்பாக க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் கூறுகையில், "இந்த பிரச்சினையைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான தனி அப்டேட் விட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இன்றைய பிரச்சினை விண்டோஸ் அடிப்படையிலான கணினிகளை மட்டுமே பாதித்துள்ளது. மேக் அல்லது லினக்ஸ் அடிப்படையிலான கணினிகளைப் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் மேலும் கூறுகையில், "இது பாதுகாப்பு செயலிழப்பு அல்லது சைபர் தாக்குதல் இல்லை.. சிக்கலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். அதை தனிமைப்படுத்தி அதைச் சரி செய்யும் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளோம். எங்கள் போர்ட்டலுக்கு சென்று இந்த அப்டேட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாங்கள் எங்கள் இணையதளத்தில் தொடர்ந்து தேவையான அப்டேட்களை வழங்குவோம்.
மேலும், ஒருவேளை உங்களுக்கு உதவி தேவை என்றால் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலமாக மட்டுமே எங்கள் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
விளக்கம்: முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தது. அதில், "இந்த சம்பவத்தைத் தீர்க்க அதிக முக்கியத்துவம் தருகிறோம். மைக்ரோசாஃப்ட் 365ஐ சரி செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் சேவைகள் படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி: இதற்கிடையே இந்தியக் கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In) இந்த சிக்கலை எப்படிச் சரி செய்யலாம் என்பது குறித்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கணினியை Safe Mode or the Windows Recovery Environmentஇல் ஸ்டார்ட் செய்து, அதில் C:\Windows\System32\drivers\CrowdStrike என்று இருப்பதைக் கண்டறிந்து C-00000291*.sys என்ற இருக்கும் கோப்பை டெலிட் செய்ய வேண்டும்.. இப்படிச் செய்துவிட்டு ரீஸ்டார்ட் செய்தால் கணினி வழக்கம் போல ஸ்டார்ட் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications