பிளாஷ்பேக் 2021: அமெரிக்காவின் "ஒரு மணி நேர" அதிபராக இருந்த கமலா ஹாரீஸ்! என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றதை அடுத்து அதிபருக்கான அதிகாரங்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அவர் அதிபராக பொறுப்பேற்றார். இதன் மூலம் அதிபரின் அதிகாரங்களை பெற்ற அமெரிக்காவின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
அமெரிக்கா வரலாற்றிலேயே அதிக வயதில் அதிபராக பதவி வகிக்கும் அதிபர் ஜோ பிடன் ஆவார். அவருக்கு வயது 79 ஆகும். இந்த நிலையில் அவர் வாஷிங்டன்னில் உள்ள மருத்துவமனையில் குடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்..

மயக்க மருந்து
அங்கு அவருக்கு கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் அமெரிக்க அதிபரின் அதிகார பொறுப்பை அவர் திரும்பி வரும் வரை கமலா ஹாரிஸ் கவனித்தார். அவர் திரும்பி வரும் வரை அதிபருக்கான பொறுப்புகளை கமலா கவனித்து வந்தார்.

25 நிமிடங்கள்
இந்த நிலையில் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவர் ஒரு மணி நேரம் 25 நிமிடங்களுக்கு அப்பதவியில் இருந்தார். எனினும் அவர் அதிபருக்கான இருக்கையில் அமரவில்லை. அமெரிக்க சட்டவிதிகளின்படி மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது மயக்க நிலையில் இருக்கும் போது அதிபரின் அதிகாரங்கள் தானாகவே துணை அதிபருக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண்
இதன் மூலம் அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் முதல் பெண், அதிபர் அதிகாரங்களை பெற்ற முதல் பெண், அமெரிக்க அதிபருக்கான அதிகாரங்களை பெற்ற முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமைகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். ஏற்கெனவே அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்கர் போன்ற பெருமைகளை பெற்றிருந்தார்.
Recommended Video

அணு ஆயுத அதிகாரம்
இந்த அதிகாரத்தின் மூலம் அமெரிக்க ராணுவம் மற்றும் அணு ஆயுத அதிகாரங்கள் கமலாவுக்கு கிடைத்தது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மீண்டும் அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு 2021 ஆம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வானது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications