என்னாது! இந்த நாட்டில் இரவு பாத்ரூம் போறது கஷ்டம் தான் போல.. என்னென்ன ரூல்ஸ் வச்சிருக்காங்க பாருங்க
வாஷிங்டன்: உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் கிடையாது. அந்தந்த நாட்டு பழக்க வழக்கங்களுக்கு ஏற்றபடி சட்ட திட்டங்கள் மாறுபட்டு உள்ளன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருக்கும் சில வினோத சட்டங்களை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒரே குற்றங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தண்டனைகள் விதிக்கப்படுவதை நாம் பார்த்து இருப்போம். அந்த ஊரில் உள்ள உள்ளூர் சட்ட திட்டங்களுக்கு ஏற்றவாறு தண்டனைகள் மாறுபடும்.

சில அரபு நாடுகளில் சிறிய குற்றங்களுக்குக் கூட மிகக்கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் மனிதாபிமான விவகாரங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே குற்றங்களுக்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
அதேபோல சில மேற்கத்திய நாடுகளில் இருக்கும் சட்ட திட்டங்கள் வியப்படையும் வகையிலும் இருக்கின்றன. அதேபோன்ற சில வினோதமான சட்டங்கள் குறித்துத்தான் இங்கே பார்க்க போகிறோம். அதன் விவரம் வருமாறு:-
* பணக்கார குட்டி நாடு சிங்கப்பூர். இந்த நாட்டில் சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும். சிறிய விதிமீறலில் ஈடுபட்டால் கூட சாக்கு போக்கு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உரிய தண்டனை விதிக்கப்படும். சிங்கப்பூருக்கு சென்றால் சுவிங்கம் மெல்லலாம் என்ற எண்ணம் இருந்தால் அதை மூட்டை கட்டி வைத்து விடுவது நல்லது.
ஏனெனில், சிங்கப்பூரில் சுவிங்கம் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் தடை செய்யப்பட்ட ஒன்று. 1992- ஆம் ஆண்டு முதலே இந்த சட்டம் அமலில் இருக்கிறது. யாராவது சுவிங்கம் வைத்திருப்பதையோ விற்பனை செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படக் கூடும். சுவிங்கம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இத்தகைய கெடுபிடிகள் அந்த நாட்டில் விதிக்கப்படுகிறதாம். இருந்தாலும் 2004 ஆம் ஆண்டு இந்த சட்டங்களில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் சுவிங்கம் மெல்ல அனுமதி கொடுக்கப்படுகிறது.
* எங்கு பார்த்தாலும் மலைகளையும் பசுமையான சூழலையும் கொண்ட நாடு சுவிட்சர்லாந்து. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்கு மேல் கழிவறைக்கு செல்வது என்றால் கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். ஏனென்றால் 10 மணிக்கு மேல் டாய்லெட்டில் சிறு நீர் கழித்து விட்டு தண்ணீரை பிளெஷ் (flush ) செய்தால் அதை ஒலி மாசுவாக கருதி இதை யாரும் செய்வது இல்லையாம். அதற்காக ஒட்டுமொத்த தடை இல்லை என்றாலும் ஒலி மாசுவாக கருதி 10 மணி முதல் காலை 7 மணி வரை டாய்லெட்டில் பிளெஷ் செய்வதை மக்களே இதை தவிர்த்து விடுவார்களாம்.
* இலங்கையில் புத்த சிலைகளுக்கு முன்பாக செல்பி எடுக்க அனுமதி கிடையாது. புத்த சிலைகளுக்கு முன் இருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது கடுமையான குற்றம் ஆகும். தப்பித்தவறி எடுத்து விட்டால் கூட உடனடியாக அதை அழிக்க சொல்லிவிடுவார்களாம். செய்ய முடியாது என அடம் பிடித்தால் போலீஸ் வந்து செய்ய வேண்டியதை செய்து விடுமாம். அதேவேளையில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு.
* ஓசோனியாவின் சாமோவா நாட்டில் மனைவியின் பிறந்த நாளை மறப்பது சட்ட விரோதம். பிறந்த நாளை மறக்கும் கணவன் மீது காவல் நிலையத்தில் மனைவி புகார் அளிக்கலாம். அதற்கு முழு உரிமை உண்டு. புகார் அளித்தால் சில நாட்கள் இதற்காக கணவன்கள் கம்பி கூட எண்ண வேண்டி இருக்குமாம்.
* இத்தாலியின் வெனிஸ் நகரத்திற்கு போனால் புறாக்கள் மீது கொஞ்சம் அக்கறை காட்டுவதை குறைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த நகரத்தில் புறாக்களுக்கு தீனி போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் யாராவது இதை செய்தால் அவர்களுக்கு 700 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். சுகாதார பிரச்சினைகள் மற்றும் புராதன சின்னங்களுக்கு சேதம் அடைவது ஆகியவற்றை தடுக்க இந்த கெடுபிடியாம்.












Click it and Unblock the Notifications