டிரம்பிற்கு விழும் அடுத்த அடி? இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட புது வரிகள் அதிரடி ரத்து?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார். அந்த வகையில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக கூறி இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வரி விதித்தார்.

forced-labour-row-25-us-states-files-petition-against-donald-trumps-fresh-tariffs-on-60-nations-in

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்நாட்டிற்கு 50 சதவீதம் வரை வரி விதித்தார். இதேபோல் பிற நாடுகளுக்கும் டிரம்ப் வரி விதித்தார். இதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஹேப்பியாகின.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை வரி விதித்தார். இதில் நம் நாட்டிற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைப்பதாக (Forced Labour) குற்றம்சாட்டி அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளது.

இந்த வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமெரிக்காவில் உள்ள 25 மாகாணங்களை ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவர். அவருக்கு பிரதான எதிர்க்கட்சியாக ஜனநாயக கட்சி செயல்பட்டு வரும் நிலையில் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ''1974ம் ஆண்டின் வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ன்படி கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு 10 முதல் 12.5 சதவிகிதம் வரையிலான வரிகளை விதித்தார். ஊழியர்களை கட்டாயப்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொழிலாளர்களின் தடுக்க தவறிய நாடுகள் என்று பட்டியலிட்டு மொத்தம் 60 நாடுகளுக்கு வரிகள் விதிக்கப்பட்டது.

இதனால் பிற நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு வரி விதிக்கும்போது அது உள்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். இது அமெரிக்க மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஏற்கனவே நீதிமன்றம் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை ரத்து செய்துள்ளது. இப்போது டிரம்ப் வேறு ஒரு காரணத்தை கூறி பிற நாடுகள் மீது இறக்குமதி வரி விதித்துள்ளார். இது சட்டவிரோதமானது.. இந்த வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி டிரம்ப் வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கு திரும்பி வழங்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாக டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல நாடுகளுக்கு வரி விதித்தார். அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தகம் உள்ளிட்டவற்றை சுட்டிககாட்டி நம் நாட்டுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்தார். அதேபோல் ஏராளமான நாடுகளுக்கு வரி விதித்தார். ஆனால் இந்த வரிவிதிப்பு அனைத்தையும் அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

இது டிரம்புக்கு பின்னடைவாக அமைந்த நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வரிக்கு எதிராகவும் நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+