'கிரீன் கார்டு' விஷயத்தில் அந்தர் பல்டி.. அமெரிக்காவில் படித்தால் போதுமாம்.. டிரம்ப் சொல்றதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறு உள்ளது. இதில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் பட்டம் பெற்றால் கிரீன் கார்டு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்திய மாணவர்கள் அதிகளவில் அமெரிக்காவில் படித்து வரும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறும் இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்ட முனைப்பு காட்டி வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் 82-வயதான ஜோ பைடனே மீண்டும் அதிபராக தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.

America Donald Trump Green Card Indian Students World

உலகின் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருப்பதால், அந்நாட்டின் அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும். தேர்தலுக்கு சில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். டொனால்டு டிரம்பை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர்.

குறிப்பாக குடியேற்ற விதிகள் தொடர்பாக பரபரப்பான கருத்துக்களை தனது பதவிக் காலத்தில் டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் தற்போது அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அண்மையில் டிரம்ப் பேசும் போது, "மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானாகவே கிரீன் கார்டு பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்" என்று கூறினார்.

கிரீன் கார்டு கிடைத்தால் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருக்க முடியும். டிரம்ப் இதற்காக கூறிய காரணம் தான் அல்டிமேட். டிரம்ப் கூறுகையில், "அமெரிக்க கல்லூரிகளில் படித்து விட்டு இந்தியா, சீனா போன்ற தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், அங்கே கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகிறார்கள். எனவே அதை இங்கே பிரதிபலிக்க வைக்க போகிறேன்" என்றார்.

உலகின் சக்தி வாய்ந்த நாடாக அறியப்படும் அமெரிக்காவில் குடியேற வெளிநாட்டினர் பலர் விரும்புகிறார்கள். ஆனால், வெளிநாட்டினர் அங்கே நிரந்தரமாக குடியிருக்க கிரீன் கார்டு அவசியம். ஆனால், கிரீன் கார்டு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. குறிப்பாக அதிபராக இருந்த போது டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் கடுமை காட்டி வந்தார். சொல்லப்போனால் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற நிலைப்பாட்டுடன் இருந்தார்.

ஆனால், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து நேரடியாக யூ டேர்ன் அடித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேற்ற விதிகள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மனிதர்கள் அல்ல மிருகம் என விமர்சித்து இருந்தார்.

அமெரிக்காவில் சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் லிஸ்டில் சீனாவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் படித்து வருகின்றனர். கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 2.89 லட்சம் சீன மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருகிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து 2022 முதல் 2023 ஆம் ஆண்டில் 2.68 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+