ஜோ பைடனுக்கு ‛செக்’.. அமெரிக்க அதிபர் வேட்பாளராகும் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா? குவியும் ஆதரவு
வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 இறுதியில் தேர்தல் நடந்தது. அப்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் தோற்றார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

2021 முதல் ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வமாக உள்ளார். அவர் தனது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவர் மீதான நீதிமன்ற வழக்குகள் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர். மாறாக ஜனநாயக கட்சியில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அவரது வயது மற்றும் உடல்நலம், ஞாபக மறதி உள்ளிட்டவை மைனஸாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் யார் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது ராஸ்முசென் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் 48 சதவீதம் பேர் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக புதிய வேட்பாளரை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மாறாக 38 சதவீதம் பேர் ஜோ பைடனே மீண்டும் போட்டியிடலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜோ பைடனுக்கு வயதானாலும் கூட அவரது செயல்பாடு சிறப்பானதாகவே இருக்கிறது. இதனால் அதிபர் வேட்பாளரை மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜோ பைடனுக்கு பதில் ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக யாரை முன்னிருத்தலாம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதில் மிச்செல் ஒபாமாவுக்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிச்செல் ஒபாமாவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கலாம் என 20 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மிச்செல் ஒபாமா என்பவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியாவார்.
அவருக்கு அடுத்தப்படியாக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசுக்க 15 சதவீதம் பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் ஜனநாயக கட்சி சார்பில் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை பரிசீலனை செய்ய வேண்டும் என மிச்செல் ஒபாமாவுக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வரை அவர் எந்த முடிவையும் கூறவில்லை. இத்தகைய சூழலில் தான் இந்த கருத்து கணிப்பில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு மாற்றாக மிச்செல் ஒபாமாவை நிறுத்தலாம் என கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications