பிரான்ஸ் அதிபர் காரை நிறுத்திய அமெரிக்க போலீஸ்.. டிரம்ப்பிற்கு போன் போட்டும் விடலையே! என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சென்று கொண்டிருந்த காரை திடீரென நடுவழியில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவருடைய காருக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், அவர் டிரம்ப்பிற்கு போன் போட்டுள்ளார். இருப்பினும், போலீசார் விடாததால் சாலையிலேயே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இப்போது ஐநா பொதுச்சபை மாநாடு நடந்து வருகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் இதில் கலந்து கொண்டார். நேற்று இந்த ஐநா கூட்டத்தில் பேசிய மக்ரோன், மத்தியக் கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதற்குப் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இம்மானுவேல் மக்ரோன்
அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் தூதரகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு அங்கு தூதரகத்திலேயே தங்கவே அவர் திட்டமிட்டிருந்தார். அப்போது தான் திடீரென யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. இதனால் மக்ரோன் கார் நடுரோட்டிலேயே நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் உருவானது.
அதாவது தூதரகம் திரும்பிக் கொண்டிருந்த மக்ரோன் காரை நியூயார்க் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். உள்ளே பிரான்ஸ் அதிபர் இருக்கிறார் எனச் சொன்ன போதிலும் போலீசார் அனுமதிக்கவில்லையாம். ஏனென்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காரும் ஐநா நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அந்த வழியாகவே திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே நியூயார்க் போலீஸார் மாக்ரோன் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நடுரோட்டில் சிக்கிய கார்
ட்ரம்ப்பின் காருக்காக அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டதால், மக்ரோன் நியூயார்க் சாலைகளில் சிக்கிக்கொண்டார். முதலில் எதற்காகத் தனது காரை நிறுத்தினார்கள் என்பது புரியாமல் குழப்பமடைந்த மக்ரோன், தனது காரில் இருந்து இறங்கி போலீசாரிடம் நேரடியாகச் சென்று கேட்டுள்ளார். அப்போது அருகே இருந்த சிலர் இதை வீடியோவாக எடுத்த நிலையில், அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
டிரம்ப்பிற்கு போன்
அந்த வீடியோவில் மக்ரோனிடம் போலீசார் அதிகாரி ஒருவர், "சாரி, தற்போது இந்தப் பகுதியில் அனைத்து ரூட்களும் மூடப்பட்டுள்ளது" என்று சொல்வது அந்த வீடியோவில் தெளிவாகக் கேட்க முடிகிறது. இதைக் கேட்டதும் மக்ரோன் நேரடியாக அதிபர் டிரம்ப்பிற்கே போன் அடித்துவிட்டார். டிரம்ப்பிற்கு போன் போட்ட மக்ரோன், "இங்கு என்ன நடந்தது தெரியுமா? உங்கள் கார் வருவதால் இந்த ரூட்டை மூடிவிட்டார்கள். நான் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறேன்" என ஜாலியாக சொன்ன அவர், சாலைத் தடுப்புகளை நீக்க ஜாலியாக சொல்கிறார்.
நடந்து சென்ற மக்ரோன்
அவர் இதுபோல பேசிக் கொண்டிருக்கும்போதே டிரம்ப்பின் கார் அந்தப் பகுதியைத் தாண்டிச் சென்றுவிட்டது. இதையடுத்து முதலில் நடந்து செல்வோருக்கு மட்டும் ரோடு திறக்கப்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தனது காருக்கு திரும்பவில்லை. அப்படியே போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். இதை அங்கிருந்த பலரும் வீடியோவாக எடுத்துப் பகிர்ந்தனர்.
நியூயார்க்கில் மக்களுடன் மக்களாக எந்தவொரு பாதுகாப்பு ஆரவாரமும் இல்லாமல் பிரான்ஸ் அதிபர் நடந்து சென்றது பலருக்கும் வியப்பையே ஏற்படுத்தியது. மக்ரோனை பார்த்த பலரும் செல்ஃபி மற்றும் போட்டோ எடுக்க வந்த நிலையில், அவர்களுக்கும் மக்ரோன் ஜாலியாக போஸ் கொடுத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications