கடலுக்கு அடியில் பகீர் மாற்றம்! பசிபிக் தட்டில் திடீர் விரிசல் ஜப்பான் டூ நியூசிலாந்து வரை ஆபத்து

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நிலநடுக்கம் ஏற்பட டெக்டோனிக் தகடுகள் காரணமாக இருக்கும் நிலையில், மிகப் பெரிய பசிபிக் டெக்டோனிக் தகடு திடீரென விரிவடைவதை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.

இந்த உலகம் பார்க்க வெளியே ஒரே போலத் தெரிந்தாலும் கூட உள்ளே அது பல டெக்டோனிக் தகடுகளைக் கொண்டதாக இருக்கிறது. பூமியின் மேலோடு மற்றும் மேல் மேலோட்டத்தில் உள்ள மிகப்பெரிய துண்டுகள் தான் இந்த டெக்டோனிக் தகடுகள்.

From Japan To New Zealand Pacific Plate is Being Torn Apart

இந்த டெக்டோனிக் தகடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் போது தான் பூகம்பம் கூட ஏற்படும். இந்த டெக்டோனிக் தகடுகள் குறித்துத் தான் ஆய்வாளர்கள் இப்போது முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

டெக்டோனிக் தகடு: அதாவது இந்த டெக்டோனிக் தகடுகளில் மிகப் பெரியது என்றால் அது பசிபிக் தட்டு தான். இந்த பசிபிக் டெக்டோனிக் தகடு இப்போது விரிவடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த பசிபிக் தகடு அமைந்துள்ள கடலில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மூலமாகவே இதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை அவர்கள் பால்ட்ஸ் (faults) என்று குறிப்பிடுகிறார்கள். ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜவ்வு மிட்டாயை இரு பக்கமும் இழுத்தால் என்ன நடக்குமோ அது போல தான் பசிபிக் தகடு இழுக்கப்படுகிறது. இதனால் கடலுக்கு அடியில் பல நூறு கிலோமீட்டர் நீளமும் பல ஆயிரம் கிமீ ஆழத்திலும் பல விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாம். நிலநடுக்கத்திற்குக் காரணமாக இருக்கும் டெக்டோனிக் தகடுகள் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வியப்பு: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "பூமியின் உட்புறங்களில் புவியியல் சிதைவுகள் ஏற்படுகிறது என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், கடல் தட்டுகளும் கூட இது நடக்கிறது என்பது இதுவரை எங்களுக்குத் தெரியாது. இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகளை ஆரம்பிக்கிறோம். பூமி வெளியே அழகாக இருந்தாலும் உள்ளே அப்படியே இருக்காது. இந்த பசிபிக் தகடு விரிவடைவது பூமியின் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

பூமிக்கு அடியில் மொத்தம் சிறிதும் பெரியதுமாக மொத்தம் 15 டெக்டோனிக் தகடுகள் உள்ளன. அதில் பசிபிக் தகடு தான் மிக பெரியதாகும்.. இதுதான் பசிபிக் பெருங்கடலின் பெரும்பகுதியை உருவாக்குகிறது, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அலாஸ்கா வரை இந்த பசிபிக் தகடு நீண்டுள்ளது. அதேபோல மேற்கே இது ஜப்பானில் இருந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வரை செல்கிறது.

ஏன் முக்கியம்: இந்த தகடு தான் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட காரணமாக இருக்கும் பசிபிக் ரிங் ஆப் பயருக்கும் காரணமாக இருக்கிறது. இந்த பசிபிக் தகடு தான் இப்போது விரிவடைவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த பசிபிக் தகடு மேன்டலுக்குள் இழுக்கப்படும் புதிய புள்ளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய், ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் ஆய்வாளர்களை இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 1970கள் முதல் எடுக்கப்பட்ட தரவுகளை சூப்பர் கம்ப்யூட்டருக்கு அனுப்பி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். பூமியின் தகடுகள் மிகவும் வலிமையாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் இதுவரை நினைத்து வந்த நிலையில், அதற்கு மாறாக அது லேசாக இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+