Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விந்தணு" முதல் "ஆணுறை" வரை எல்லாமே பிரச்சினை தான்.! அலறும் இளம்பெண்.. இது என்ன வினோதமாக இருக்கே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் 34 வயதான அலிசன் டென்னிசன் என்ற பெண்ணுக்கு உடலுறவு கொள்ள முடியாதாம். ரொம்பவே வினோதமான பாதிப்பால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.

34 வயதான அலிசன் டென்னிசன் என்ற பெண் உடலுறவு போது தனக்கு ஏற்படும் அசாதாரண நிலை குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 24 வயதான போது அலிசனுக்கு ஏதோ ஒரு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

From Semen to Condoms, Woman faces struggle while being intimate

ஆனால், முதலில் எதனால் அவருக்கு அலர்ஜி எனத் தெரியவில்லை. அவர்கள் ஒவ்வொரு விஷயத்தைத் தவிர்த்த போதிலும் துல்லியமாக எதனால் அலர்ஜி என்பது தெரியவில்லை. இதையடுத்து அவர் மருத்துவரிடம் சென்றுள்ளார்.

விரிவான டெஸ்டிங்: மருத்துவர் அவருக்கு விரிவான அலர்ஜி சோதனையைச் செய்துள்ளார். 160 விஷயங்களில் எதற்கு அலர்ஜி என்பதை கண்டறிய மருத்துவர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அதில் தான் அலிசனுக்கு எஹ்லர்ஸ்-டான்லோஸ் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது அவருக்கு விந்து அலர்ஜி இருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் அரிதிலும் அரிதான ஒரு நோயாகும்.

பொதுவாக ஆணின் விந்தணுவில் உள்ள புரதம் காரணமாக இந்த அலர்ஜி ஏற்படுகிறது. இதை செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி என்று குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாக உடலுறவு சமயத்தில் இவருக்கு பெண் உறுப்பில் வலி மிகுந்த எரியும் உணர்வு ஏற்படுகிறதாம். இதனால் தனது பாய் பிரண்ட் உடன் நெருக்கமாக இருக்க முடிவதில்லை என வேதனைப்படுகிறார்.

மிகுந்த சிரமங்கள்: இதனால் தான் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக அலிசன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த அலர்ஜியால் எனக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதை என்னால் மற்றவர்களுடன் சொல்ல கூட முடிவதில்லை. இதனால் என்னால் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க முடிவதில்லை.. அலர்ஜி அந்தளவுக்கு இருக்கிறது. ஆணுறையும் கூட எனக்கு அலர்ஜியை தான் தருகிறது" என்கிறார்.

அலிசனுக்கு பெண் உறுப்பில் எரியும் உணர்வு ஏற்படுவதால் உடலுறவு கொள்ள முடிவதில்லையாம். இதனால் இந்த அலர்ஜி அவரது பெர்சனல் அந்தரங்க வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

ஆணுறைகள் கூட யூஸ் பண்ண முடில: மருத்துவர்கள் அலிசனுக்கு இந்த பாதிப்பு இருப்பதை உறுதி செய்த உடன் அவரை ஆணுறைகளைப் பயன்படுத்தவே கூறியுள்ளனர். இருப்பினும், ஆணுறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களும் அலிசனுக்கு அலர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் அவர் இருக்கிறார். அலிசனின் உடல் விந்தை நிராகரிப்பதால் இவர் தனது காதலனுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடியாத சூழல் இருக்கிறது. இது இவரது காதல் வாழ்க்கையே சிக்கலில் தள்ளி இருக்கிறது.

மேலும், அலிசனுக்கு ரத்த உறைதல் பிரச்சினையும் இருப்பதால் கருத்தரிப்பதும் சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது. இத்தனை பிரச்சினைகள் இருக்கும் போதிலும் இந்த ஜோடி கருத்தரிப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.

தீர்வு கிடைக்குமா: இது குறித்து அலிசன் மேலும் கூறுகையில், "நான் எப்படி ஒரு குழந்தையைப் பெறப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.. இதற்கான தீர்வும் எனக்குத் தெரியவில்லை. காலம் முழுக்க எனது உடல் விந்தை நிராகரிக்குமா எனத் தெரியவில்லை" என்றார். இந்த பாதிப்பிற்காக அவர் சிகிச்சை பெற்றும் வருகிறார். இருப்பினும், அவருக்கு 34 வயதே ஆகும் நிலையில், சில ஆண்டுகளில் தனக்கான தீர்வு கிடைக்கும் என்று அலிசன் கூறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+