ஹாப்பி நியூஸ், இனி மாஸ்க் அணிய தேவையில்லை.. ஆனால் இதை பண்ணி இருக்கனும்.. அமெரிக்கா முக்கிய அறிவிப்பு
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டவர்கள் மாஸ்க்குளை அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை மக்கள் முறையாக பின்பற்றாததும் உருமாறிய கொரோனா பரவலுமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.

பைடன் வாக்குறுதி
குறிப்பாக, அமெரிக்காவில் அதிபர் பைடன் பதவியேற்ற பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பல்வேறு மாகாணங்களிலும் புதிதாக தடுப்பூசி மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தான் பதவியேற்ற பின் 100 நாட்கள் மட்டும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்தால் போதும் என்றும் அதற்கு 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.

மாஸ்க் தேவையில்லை
இந்நிலையில், அமெரிக்காவின் நோய் தடுப்பு பிரிவு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொள்ளும் நபர், உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் மாஸ்க் அணியாமல் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் என்ன
அதேபோல தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் ஒருவர், கொரோனா பாதிப்பு உள்ளவருடன் தொடர்பை வைத்திருந்தார் என்றாலும் அவர் தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றால் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள்
அமெரிக்காவில் விரைவில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. தற்போது வரை பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளின் அவரசக்கால பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டும் அளித்தால் போதும் என்பதால் வரும் காலங்களில் இந்தத் தடுப்பூசியே அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 2.97 கோடியைக் கடந்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் அமெரிக்காவில் 5.38 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகிலேயே கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications