வாத்துக்கள் ஏற்படுத்திய டிராபிக் ஜாம்.. ஆபிசுக்கு போனும் வழிவிடுங்கள்.. கலாய்த்த நெட்டிசன்கள்!
வாஷிங்டன்: வாத்துக்கள் சில சாலையில் புகுந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
சூர்ய வம்சம் படத்தில் வரும் வாத்து காமெடிக்கு பெரும் வரவேற்பு உண்டு.
அதேபோல் ஒரு பெரிய சாலையில், நூற்றுக்கணக்கான வாத்துக்கள் புகுந்து சாலையில் செல்லும் வாகனங்களை செல்லவிடாமல் டிராபிக் ஜாமை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
திங்கள் கிழமை என்றாலே பரபரப்புதான்... இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து அலுவலகம் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகள் திறப்பு என அனைத்து தரப்பினரும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதால் சாலைகளும் பரபரப்பாகவே இருக்கும். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகத்திற்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் சிலருக்கு நேரிடும். அதிக அளவு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது என்பது மிகவும் சகஜமானது. இதில் வியப்பேதும் இல்லை.

வாத்துக்களால் டிராபிக் ஜாம்
ஆனால் தாமதமாக ஆபிசுக்கு போகும்போது ஏன் தாமதம் என்று நம்மை உயர் அதிகாரிகள் கேட்கும் போது அதற்கு உரிய பதில் கூறினால் பரவாயில்லை. வாத்துக்களால் தான் லேட் ஆகிவிட்டது என்று கூற முடியுமா?.. ஆனால் அப்படி ஒரு சம்பவம் தான் தனக்கு நடந்ததாக, வாகன ஓட்டி ஒருவர் சமூகவலத்தளத்தில் அதனை பகிர்ந்துள்ளார். வாத்துக்களால் சாலையில் சிக்கி தவித்த அவர் இதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு தனது நேர்ந்த இந்த சுவாரசிய அனுபம் குறித்து ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

குடுகுடுவென ஓடிய வாத்துக்கள்
14 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ''சாலை முழுக்க வாத்துக்கள் கூட்டம் தெரிகிறது. 4 வழிச்சாலை போல் காட்சியளிக்கும் அந்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தவாறு வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. இதில் அந்த வாத்து கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு வெள்ளை நிற காரும்.. அதன் பின்னால் மற்றொரு காரும் என வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர். ஆனால் வாத்துக்கள் ஒன்ற பின் ஒன்றாக குடுகுடுவன ஓடுகின்றன. குறிப்பாக அந்த வெள்ளை நிற காரை மீண்டும் மீண்டும் வாத்துக்கள் சுற்றி வருவது போல் அந்த வீடியோவில் இருந்தது.

நெட்டிசன்கள் கருத்து
அந்த வெள்ளை நிற காரின் பின்புறத்தில் உள்ள காரில் இருந்தவர் தான் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், 'ஆபிசுக்கு லேட் ஆகிட்டு' அவங்களுக்கு வழிவிடுங்க என்றும், மேலும் சிலர், சாலையில் வாத்துக்கள் குடுகுடுவென செல்வதை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications