அமெரிக்காவில் புதைந்துள்ள ஜெர்மன் தங்கம்.. மதிப்பு ரூ.30 லட்சம் கோடி! டிரம்ப் சும்மா இருக்க மாட்டாரே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஜெர்மனி நாட்டிற்குச் சொந்தமான 3252 தங்கம் இப்போது அமெரிக்காவில் இருக்கிறது. அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் தடாலடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இந்த தங்கம் பேசுபொருள் ஆகியுள்ளது. உடனடியாக அமெரிக்காவில் இருந்து இந்த தங்கத்தை எடுத்து வர வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை ஒரு ரிசர்வாக எப்போதும் வைத்திருக்கும். திடீரென பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தங்கம் முக்கியமாகத் தேவை. இதனால் இந்தியா, அமெரிக்கா, சீனா என அனைத்து நாடுகளும் தங்கத்தை ஒரு ரிசர்வாக வைத்திருக்கும். சமீபத்தில் தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கக் கூட உலக நாடுகள் தங்கத்தைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கியதே முக்கிய காரணமாகும்.

Gold Donald Trump America

ரூ.30.24 லட்சம் கோடி

இப்போது அமெரிக்காவுக்குப் பிறகு அதிகபட்ச தங்க ரிசர்வை வைத்திருக்கும் நாடாக ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான பன்டேஸ்பேங் வசம் மட்டும் இப்போது 3352 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ.30.24 லட்சம் கோடியாகும். அதில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சீக்ரெட் வால்டில் புதைந்து கிடக்கிறது.

பனிப்போர் சமயத்தில் தனது வசம் தங்கம் இருந்தால் அதைச் சோவியத் அபகரிக்கும் என அஞ்சிய ஜெர்மனி அதை அமெரிக்காவில் சேமிக்க முடிவு செய்தது. அமெரிக்கா ஜெர்மனி இடையே நல்லுறவு உருவாகவும் இதுவே தொடக்கப் புள்ளியாக இருந்தது.

பேசுபொருளான தங்கம்

ஜெர்மனி நாட்டிற்குச் சொந்தமான இவ்வளவு பெரிய சொத்து அமெரிக்காவில் இருப்பது இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக டிரம்ப் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்வுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் எப்போதும் அதிபர் கட்டுப்பாட்டில் பெடரல் வங்கி இருக்காது. நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான நடவடிக்கைகளையே அரசியல் சார்பு இல்லாமல் எடுக்கும். ஆனால், டிரம்ப் பெடரல் வங்கியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பார்க்கிறார்.

இதுவே ஜெர்மனி நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் தங்களுக்குச் சொந்தமான தங்கத்தை உடனடியாக அமெரிக்காவில் இருந்து திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளது. அங்குள்ள வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சி இதைப் பெரிய இயக்கமாகவே அங்கு முன்னெடுத்து வருகிறது. டிரம்பால் பயந்த ஜெர்மனி மக்களும் இதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

எழுந்த கோரிக்கை

இது தொடர்பாக ஜெர்மன் நாட்டின் வரி செலுத்துவோர் கூட்டமைப்பு சார்பில் அந்நாட்டின் மத்திய வங்கியான பன்டேஸ்பேங்க் மற்றும் நிதி அமைச்சகத்திற்குக் கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தை உடனடியாக மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கடிதத்தில், "அமெரிக்க மத்திய வங்கியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர டிரம்ப் முயல்கிறார். அது நடந்தால் ஜெர்மனி நாட்டின் தங்க ரிசர்வும் அவர் வசம் போய்விடும். இது எங்கள் பணம், அதை மீட்டுக் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பை நம்ப முடியாது

அதேபோல ஜெர்மனியில் ஆளும் கட்சியாக உள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினரிலும் இந்த குரல்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஜெர்மன் எம்பி மார்கஸ் ஃபெர்பர், "கடந்த காலங்களைப் போல அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாகப் பார்க்க முடியாது. ஏனென்றால் டிரம்ப்பை நம்ப முடியாது.. திடீரென ஒரு நாள் வந்து வெளிநாட்டுத் தங்கத்தை என்ன செய்ய வேண்டும் என நான் சொல்கிறேன் எனச் சொன்னாலும் சொல்வார். எனவே, இந்த புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு ஜெர்மனி மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

புவிசார் அரசியல்

அதேநேரம் தனது தங்கத்தை இப்போதைக்கு அமெரிக்காவில் இருந்து எடுத்து வரும் திட்டம் எதுவும் இல்லை என்றே ஜெர்மனி மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒருவேளை ஜெர்மனி மத்திய வங்கி அமெரிக்காவில் இருந்து தனது தங்கத்தை வாபஸ் பெற்றால் அது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும். அது அமெரிக்கா மீதான சர்வதேச நம்பிக்கையைக் குறைப்பதாக இருக்கும். தற்போதைய சூழலில் ஜெர்மனி தனது தங்கத்தை எடுத்து வரும் திட்டம் இல்லை எனச் சொன்னாலும் கூட டிரம்ப் இருக்கும் வரை எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறும் என்பதே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+