வெடித்து சிதறும் சூரியன்? மணிக்கு 700 கிமீ வேகத்தில் பூமியை தாக்க போகும் சூரிய புயல்! என்ன நடக்கும்?
வாஷிங்டன்: சூரியின் உள்ள மிகப் பெரிய சூரிய புள்ளியான AR4079ல் பள்ளத்தாக்கு போலக் காட்சியளிக்கும் ஒளி பாலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒளி பாலம் எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம்.. ஒருவேளை அது வெடித்துச் சிதறும் போது பூமியை நோக்கி மணிக்குச் சுமார் 700 கிமீ வேகத்தில் சூரியப் புயல் வீசும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் சூரியன் மிகவும் ஆக்டிவாக இருந்தது. இதனால் தான் உலகின் மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக 2024 உருவெடுத்தது. இந்தாண்டு வெப்பம் குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர் எதிராக வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இந்தாண்டும் சூரியன் அதேபோலவே ஆக்டிவாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..

சூரிய புயல்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலே பூமி வழக்கத்திற்கு மாறாக வேகமான சூரிய புயலை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூரிய புயல் வினாடிக்கு 700 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைத் தாக்கியுள்ளது. இது சிறிய G1-வகுப்பு புவி காந்தப் புயல்களை உருவாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் உள்ள ஒரு பெரிய கொரோனல் துளை காரணமாகவே இந்தச் சூரியப் புயல் ஏற்பட்டுள்ளது. கொரோனல் என்ற இந்த இடத்தில் தான் சூரிய காந்தப்புலம் திறக்கும். இங்கிருந்து வெளியேறும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் அதிவேகமாகப் பூமியை நோக்கிப் பயணிக்கும். இருப்பினும், இதனால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.
சூரிய புள்ளி
அதேநேரம் சூரியனின் மிகப் பெரிய சூரியப் புள்ளியான AR4079, இன்னும் அமைதியாகவே உள்ளது. இதை ஆய்வாளர்கள் புதிராகவே பார்க்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு பெரிய சூரியப் புள்ளி சக்திவாய்ந்த சூரியக் கதிர்களை வெளியிடும். ஆனால் AR4079 இதுவரை ஒரு சில பலவீனமான C-வகுப்பு சூரியக் கதிர்களை மட்டுமே உருவாக்கியுள்ளது. இந்த அசாதாரண அமைதியே ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் இது புயலுக்கு முந்தைய அமைதியாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒளி பாலம்
சூரியப் புள்ளி 4079இன் முக்கிய அம்சமே அதிலுள்ள முக்கிய ஒளிப் பாலம் தான். சூரியப் புள்ளியின் இருண்ட மையத்தைப் பிரிக்கும் ஒரு பிரகாசமான பள்ளத்தாக்கு போன்ற அமைப்பு அங்கே இருக்கிறது. அதைத் தான் ஒளி பாலம் என்கிறார்கள். இதுபோன்ற ஒளிப் பாலங்கள் பெரும்பாலும் மேற்பரப்பிற்கு அடியில் சிக்கலான காந்தச் செயல்பாட்டைக் குறிக்கின்றன. அந்த இடத்தில் காந்தப்புலங்கள் குறுக்கிட்டு மீண்டும் இணைகின்றன.
என்ன நடக்கும்
இதுபோன்ற ஒளி பாலம் திடீரென வெடித்துச் சிதறலாம். அப்போது அளவுக்கு அதிகமான எனர்ஜி வெளிப்படலாம். அப்போது பூமியை நோக்கி வரும் சூரியப் புயல் மிக மிக வலிமையானதாக இருக்கும். இது பூமியின் காந்த மண்டலத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அதேநேரம் அனைத்து ஒளிப் பாலமும் வெடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. சில நேரங்களில் ஒளிப் பாலங்கள் இருக்கும் சூரிய புள்ளிகள் அமைதியாக உடைந்து விடவும் செய்யும். இந்தச் சூரிய புள்ளி வெடித்துச் சிதறுவது என்பது அவ்வப்போது நடப்பதுதான். இதனால் சூரியின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் இந்தச் சூரிய புள்ளி வெடிக்குமா இல்லை அமைதியாக உடைந்துவிடுமா என்பது குறித்துத் தெளிவான பதில் தெரியவில்லை. ஆய்வாளர்கள் தொடர்ந்து இதைக் கண்காணித்து வரும் சூழலில் வரும் நாட்களில் இதற்கான பதில் நமக்குத் தெளிவாகக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications