Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கடவுளின் கை.." விண்வெளியில் நடந்த மேஜிக்.. படம் பிடித்த "டார்க் எனர்ஜி" கேமரா! மிரண்ட ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமியில் இருந்து பல மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தெரிந்த கடவுளின் கையை டார்க் எனர்ஜி கேமரா படம் பிடித்துள்ளது. இந்த படம் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பல சாட்டிலைட்களை அனுப்பி உள்ளனர்.. மேலும், தொலைநோக்கி மூலமாகவும் அவற்றைக் கண்காணித்து வருகின்றனர்.

God s Hand Reaching For The Stars is captured by Dark Energy Camera

இதற்கிடையே டார்க் எனர்ஜி கேமரா (Dark Energy Cameraந- DECam) விண்வெளியில் நடந்த கலக்கலான மாற்றங்களை அப்படியே படம் பிடித்துள்ளது. தொலைதூரத்தில் இருக்கும் விண்மீனை நோக்கி ஒரு கை நீள்வது போல இருக்கும் இந்தப் படத்தை டார்க் எனர்ஜி கேமரா படம் பிடித்துள்ளது.

டார்க் எனர்ஜி கேமரா: டார்க் எனர்ஜி கேமரா என்றால் என்ன எனக் குழம்பிவிட வேண்டாம். டார்க் எனர்ஜி கேமரா (DECam) என்பது 570 மெகாபிக்சல், மிக பெரிய இமேஜர் சென்சர் உடன் விக்டர் எம் என்ற தொலைநோக்கில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கேமரா ஆகும். இது சிலியில் உள்ள Cerro Tololo என்ற இன்டர்-அமெரிக்கன் அப்சர்வேட்டரியில் இருக்கிறது.

இந்த டெலஸ்கோப் தான் விண்வெளியில் நடந்த அதிசயசத்தை பதிவு செய்துள்ளது. அந்த விண்வெளியை நோக்கிப் பாயும் அந்த கையை ஆய்வாளர்கள் "கடவுளின் கை" என்று குறிப்பிடுகிறார்கள். இது நமது பிரபஞ்சம் எந்தளவுக்குப் பரந்து விரிந்து இருக்கிறது என்பதை நமக்குக் காட்டுகிறது.

கடவுளின் கை: கடவுளின் கை என ஆய்வாளர்கள் அழைக்கும் இது ஒரு cometary globules. இந்த cometary globules என்பது பார்க்க வால்மீன்கள் (comets) போல இருந்தாலும் உண்மையில் அவை வால்மீன்கள் இல்லை. அவை அடர்த்தியான வாயு மற்றும் தூசியால் உருவான மேகங்கள் ஆகும். தொலைவில் இருந்து பார்க்கும் போது பார்க்க அவை அப்படியே வால்மீன்கள் போன்ற வடிவத்தில் இருக்கும். 1976 முதலே பரவலாக இந்த cometary globules விண்வெளியில் கண்டறியப்படுகிறது.

அவை பொதுவாகப் புதிதாகப் பிறந்த நட்சத்திரங்களை மையங்களில் கொண்டிருக்கும்.. மேலும், அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து வெளியாகும் அதிக கதிர்வீச்சினால் இவை உருவாக்கப்படுகின்றன. ஒரு விண்மீன் பிறந்து அவை பரிணாம வளர்ச்சி அடைய இந்த வால்மீன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடவுளின் கை என்றால் என்ன: சரி இந்த கடவுளின் கை விஷயத்திற்கு வருவோம்.. இந்த கடவுளின் கை பால்வெளி மண்டலத்தில் 'பப்பிஸ்' என்ற இடத்தில் சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இந்த கடவுளின் கை என்பது 1.5 ஒளி ஆண்டு சைஸில் இருக்கிறது. இதன் நீளமான வால் 8 ஒளி ஆண்டுகள் நீளமாக இருக்கிறது. ஒளி ஆண்டு என்றதும் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளியின் வேகத்தில் நாம் ஓராண்டு பயணிக்கும் தூரத்தையே குறிக்கிறது. இது சுமார் 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் வரும்.

எங்கே இருக்கிறது: இந்த "கடவுளின் கை" 100 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலையில் இருக்கும் ESO 257-19 (PGC 21338) என்ற விண்மீனை நோக்கி அதன் கரத்தை நீட்டுவது போல இருக்கிறது. அதேநேரம் ஆய்வாளர்கள் என்னதான் அதை "கடவுளின் கை" என்று அழைத்தாலும் அதில் இயற்கையைத் தாண்டி சக்தி எதுவும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+