குவிந்து கிடக்கும் தங்கம், ஆயுதங்கள்? சிரியாவில் அசாத்தின் வீட்டிற்குள் பதுங்கு குழி! வெளியான வீடியோ
வாஷிங்டன்: சிரியாவில் ஆட்சி அதிகாரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிபராக இருந்த அசாத் அந்நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். அசாத் நாட்டை விட்டு ஓடியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டு இருந்த ரகசிய சுரங்க அறை என ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சுரங்க அறையில், தங்கம், ஆயுதங்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியா கிளர்ச்சியாளர்கள் கட்டுக்குள் சென்றுள்ளது. அதிபர் பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சிரியாவின் அரசு டிவி சேனலில் உரையாற்றிய கிளர்ச்சியாளர்களில் ஒரு குழுவினர், அதிபர் அல்-அசாத் நாட்டை விட்டு தப்பியோடினார். 53 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பதுங்கு குழி: சுதந்திர சிரியா அரசின், அரசு நிறுவனங்களை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி போராளிகள் மற்றும் குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்று கூறினர். சிரியா கிளர்ச்சியாளர்களின் கட்டுக்குள் வந்த நிலையில், அதிபரின் வீட்டை கிளர்ச்சியாளர்கள் சூறையாடிய காட்சிகள் வெளியாகின. இதற்கிடையே, பஷர் அல் அசாத்தின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்டுள்ள பதுங்கு குழிகளை கிளர்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கம், ஆயுதங்கள்: இந்த பங்கருக்குள் தங்கம், ஆயுதங்கள் உள்ளிட்டவையும் குவிந்து கிடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி வருகிறது. அசாத்தின் இல்லத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சொல்லப்படுகிறது. இந்த வீடியோவில், சினிமாவில் காட்டப்படுவது போல பிரமாண்ட மாளிகைக்குள் கதவை திறந்து சென்றால் அடுத்த ஒரு வலுவான ஒரு கதவை நோக்கி செல்கிறது. அதை திறந்து சென்றால் ஆழமாக ஒரு படிக்கட்டு செல்கிறது.
சொகுசு வாழ்க்கைக்கான பொருட்கள்: அதன் முடிவில் மற்றொரு கதவு உள்ளது. அதை திறந்து சென்றால், ஆழமான ஒரு சுரங்கத்திற்குள் செல்கிறது. அந்த சுரங்கத்தின் அடிப்பகுதியில் பல பெட்டிகள் உள்ளன. பிற பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இந்த சுரங்கத்தின் கடைசி பகுதியில் ஒரு காரிடர் உள்ளது. அந்த சுரங்கத்திற்குள் பல அறைகள் இருப்பது போல தெரிகிறது. ஒரு அறையில், பிளாஸ்டிக் பைகள், சிறிய பெட்டிகள், பெரிய ஓய்வறை, சோஃபாக்கள், காஃபி டேபிள் என உள்ளே சொகுசு வாழ்க்கைக்கான அனைத்தும் உள்ளன.
The bunker of Maher al-#Assad under his house in Damascus pic.twitter.com/qs7Bfn2qZL
— C4H10FO2P ☠️ (@markito0171) December 8, 2024
பரவும் வீடியோ: இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து தப்பிய முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத் முதலில் எங்கு சென்றார் என்ற தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தது.
ஆனால், பஷார் அல் அசாத் தஞ்சம் அடைந்து இருப்பதாக கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவிப்பை வெளியிட்ட பின்பு இது உறுதியானது. ரஷ்ய அதிபர் புதின் தனிப்பட்ட முறையில் அசாத்துக்கு அடைக்கலம் அளிக்க முடிவு செய்ததாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். எனினும் அசாத் ரஷ்யாவில் எங்கு உள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications