தங்கம் விலை இதுக்கு மேல குறையுமா? குட் நியூஸ் சொன்ன ஆனந்த் சீனிவாசன்.. ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தங்கம் விலை பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்து வரும் நிலையில், தங்கம் விலை இதை விட குறையுமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இந்தியாவில் கலாச்சார ரீதியாகவே தங்கத்திற்குப் பெரியளவில் முக்கியத்துவம் தருவார்கள். இதனால் அனைத்து குடும்பங்களிலும் குறைந்தது சில கிராம் தங்கமாவது நகையாகவோ காயினாகவோ இருக்கும்.

 Gold price will not will huge surge for next 18 months says Anand srinivasan

கலாச்சார ரீதியாகத் தாண்டி பொருளாதார ரீதியாகவும் தங்கம் முக்கியமானது. ஏனென்றால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலை குறைந்ததே இல்லை. எப்போதும் அதிகரித்தே வருகிறது. மேலும், பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது தங்கத்தை எளிதாகப் பணமாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

தங்கம் விலை: இதன் காரணமாகவே இந்தியாவில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பலரும் தங்கத்தை ஒரு சேமிப்பாக வாங்கி வைத்து வருகிறார்கள். இன்று (நவம்பர் 18) சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 5,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 6,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை ஏன் இந்த பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது.. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "அமெரிக்கா பொருளாதாரம் இப்போது சற்று இக்கட்டான சூழலில் இருக்கிறது.. இதற்கும் இஸ்ரேல் ஹமாஸ் விவகாரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. நாம் அனைவரும் அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள்.

இதனால் உலகளவில் பங்குச்சந்தை அதிகரிக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படி நடக்காது. விலைவாசி உயர்வு காரணமாக அமெரிக்காவில் இப்போதைக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் வட்டி விகிதம் குறைப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.

எவ்வளவு காலம்: தங்கம் விலையைப் பொறுத்தவரை அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை. இதற்கு மேல் அமெரிக்கா வட்டி விகிதத்தை இதற்கு மேல் அதிகரிக்கவில்லை என்றால் இதுதான் தங்கம் விலையில் குறைந்தபட்சமாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியே குறைந்தாலும் அது மிக பெரியளவில் குறையாது. என்னைக் கேட்டால் அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கம் விலை இதே ரேஞ்சில் தான் இருக்கும்.

ஏனென்றால் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தால் மட்டுமே தங்கம் விலை ஏறும். அமெரிக்க டாலர் மதிப்பு குறைய வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். அமெரிக்காவில் வட்டி விகித குறைப்பு என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. அங்கு வட்டி விகிதத்தைக் குறைக்கக் குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும். அது வரை தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருக்காது. இதேபோலவே இருக்கும்.

கடைசியில் ஒரு ட்விஸ்ட்: எனவே, வரை தங்கத்தை 5200 ரூபாய் முதல் ரூ. 5600 வரை தங்கத்தை வாங்குவது சரியாக இருக்கும். இதுதான் உங்கள் எமர்ஜென்சி தொகையாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தங்கத்தை வாங்குவது சரியானதாக இருக்கும்.. அதேநேரம் இடையில் எதாவது சர்வதேச பதற்றமான நிகழ்வுகள் நடந்தால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் என்பதால் அதையும் கவனத்தில் கொள்ளவும்" என்றார்.

அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே பணவீக்கம் காரணமாக விலைவாசி அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இப்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 5.5%ஆக உள்ளது. அங்கே வட்டி விகிதம் மேலும் உயர்த்தினால் தங்கம் விலை குறையும். அதேநேரம் வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தவில்லை என்றால் தங்கம் இதற்குக் கீழ் செல்லாது என்பதையே ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+