Good Bye USA.. அமெரிக்காவில் இருந்து சென்னை கிளம்பிய ஸ்டாலின்.. நெகிழ்ச்சி பதிவு
வாஷிங்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் அந்த சுற்றுப்பயணத்தை முடித்து விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ‛Goodbye, USA' என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27 ம் தேதி சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுதவிர பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினின் 17 நாள் அமெரிக்கா சுற்றுப்பயணம் என்பது இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அவர் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து இன்று துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். சிகோகோ விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் திரண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ 'Goodbye, USA!' என பதிவிட்டுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications