உலகம் முழுக்க முடங்கி மீண்ட கூகுள் நியூஸ்.. மொபைலில் செய்தி படிக்க முடியாமல் திணறிய மக்கள்
வாஷிங்டன்: கூகுள் நியூஸ் சேவை இன்று மாலை திடீரென முடங்கியது. மீண்டும் முயற்சிக்கவும்.. எதோ தவறாக சென்று விட்டது... என வந்ததால் பயனர்கள் பலரும் தங்களால் செய்திகளை படிக்க முடியவில்லை என்றும் சர்வர் டவுன் ஆகியிருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகிறார்கள்
டெக் உலகின் மிகப்பெரும் ஜாம்பவான் நிறுவனமாக விளங்குகிறது கூகுள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம் இணைய தேடு பொறியியலில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது.

பயனர்களை தக்க வைக்கும் விதமாக பல்வேறு சேவைகளையும் கூகுள் வழங்கி வருகிறது. அந்த வகையில், கூகுள் நியூஸ் என்ற சேவையும் கூகுள் வைத்துள்ளது. பயனர்கள் பலரும் சர்வதேசம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகளை எளிதாக படித்து அறிந்து கொள்ளும் வகையில், இந்த கூகுள் நியூஸ் சேவை உள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென நியூஸ் திடீரென முடங்கியது. வழக்கம் போல கூகுள் நியூஸ் பக்கம் சென்ற பயனர்களுக்கு செய்திகளை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டது. மீண்டும் முயற்சிக்கவும்.. எதோ தவறாக சென்று விட்டது... Uh-oh! போன்றவைகளையே வந்ததால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
கூகுள் டிஸ்கவர் செயலியும் சிறிது நேரம் பாதிக்கப்படது. எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் இது தொடர்பாக பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே, தற்போது கூகுள் நியூஸ் சேவை வழக்கம் போல செயல் பட தொடங்கிவிட்டதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
கூகுள் நியூஸ் பக்கம் திடீரன முடங்கியதற்கான காரணம் குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் சிறிது நேரம் செயல்படாமல் முடங்கியதாக downdetector.com இணையதரவுகள் காட்டுகின்றன. சமூக வலைத்தளங்களில் கூகுள் நியூஸ் செயல்படவில்லை என்றும் சர்வர் முடங்கியிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications