"ரூ.15 லட்சம் கோடியை" இழந்த எலான் மஸ்க்.. புது கின்னஸ் ரெக்கார்ட்டாம்.. கதறும் முதலீட்டாளர்கள்
வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த எலான் மஸ்க் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஆனால், ரொம்பவே மோசமான ஒரு காரணத்திற்காக அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறார்.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் எலான் எஸ்க். இவரது டெஸ்லா நிறுவனம் உலகெங்கும் புகழ் பெற்றது.. மின்சார வாகனச் சந்தை பார்த்து உலகமே தயங்கிய போது, அதை வெற்றிகரமான நடத்திக் காட்டியவர் எலான் மஸ்க்.
இதன் காரணமாகவே டெஸ்லா கார்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உருவாகினார்கள். டெஸ்லா மட்டுமின்றி ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

எலான் மஸ்க்
கடந்த சில ஆண்டுகளாகப் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த நிலையில், அப்போது அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. அதிகபட்சமாகக் கடந்த 2021 இறுதியில் டெஸ்டா பங்கு விலை 400 டாலர்களை (சுமார் ரூ. 32,ooo) கடந்தது. அதன் பிறகு மெல்லக் குறையத் தொடங்கியது. கடந்தாண்டு கூட டெஸ்லா 300 டாலர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்ற தொடங்கியவுடன் அவரது சொத்து மதிப்பு மடமடவென சரிந்தது. இப்போது 119 டாலராக (சுமார் ரூ. 9,762) உள்ளது.

கின்னஸ் உலக சாதனை
இத்துடன் ட்விட்டர் நிறுவனத்தையும் அதிக விலைக்கு வாங்கியது அவரது நிலைமையை மோசமாக்கியது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர் வரிசையில் டாப் இடத்தையும் அவர் இழந்தார். இதனிடையே எலான் மஸ்க் இப்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஆனால், ஒரு மோசமான காரணத்திற்காக இடம் பெற்றுள்ளார். அதாவது உலக வரலாற்றிலேயே அதிக சொத்து மதிப்பை இழந்த நபர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

200 பில்லியன் டாலர் சொத்து இழப்பு
கடந்த நவம்பர் 2021 முதல் எலான் மஸ்க் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அவர் சுமார் 182 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 14.8 லட்சம் கோடி) சொத்தை இழந்துள்ளார். இருப்பினும், சில வல்லுநர்கள் அதை விட அதிகமாக அதாவது சுமார் 200 பில்லியன் டாலர் (ரூ. 1.63 லட்சம் கோடி) சொத்துகளை இழந்துள்ளார். அவர் துல்லியமாக எத்தனை கோடியை இழந்துள்ளார் என்பதைச் சொல்ல முடியாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சாதனை முறியடிப்பு
இருந்தாலும் கூட, மஸ்கின் மொத்த இழப்பு கடந்த 2000இல் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் அடைந்த $58.6 பில்லியன் நஷ்டத்தை முறிடித்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். எலான் மஸ்கின் சொத்து மதிப்பு நவம்பர் 2021இல் $320 பில்லியனாக இருந்த நிலையில், அது ஜனவரி 2023 நிலவரப்படி $137 பில்லியனாக (11.2 லட்சம் கோடி) குறைந்துள்ளது..

டெஸ்லா
டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்ததே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ட்விட்டரை வாங்கக் கடந்த முதலில் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளையும்.. அடுத்து 4 பில்லியன் மதிப்பிலான பங்குகளை அவர் விற்றார். கடந்த ஏப்ரல் முதல் மட்டும் அவர் இப்படி $23 பில்லியன் டாலரை விற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு இப்படி மடமடவென சரிந்ததால் அவர் உலக பணக்காரர் என்ற சிறப்பையும் இழந்துள்ளார்.

சர்ச்சை
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அதன் பிறகே டெஸ்லா பங்குகள் மிக மோசமாகச் சரியத் தொடங்கியது. ட்விட்டரை வாங்கியதற்குப் பிறகு அவர் தொடர்ச்சியாகச் சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். மேலும், பொதுவெளியிலேயே பல தரப்பு மக்களையும் புண்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாகப் பலரும் தொடர்ந்து டெஸ்லா பங்குகள் விற்று வருகின்றனர். டெஸ்லா வரலாற்றில் இந்தளவுக்குப் பங்குகள் விற்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications