"இந்தியர்கள் அமெரிக்கா செல்வதை தடுக்கிறார்கள்" H-1B விசா விவகாரம்! டிரம்பால் கதறும் இந்திய இளைஞர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் பல ஆயிரம் இந்தியர்களின் விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பலருடைய குடும்பங்களும் கூட பிரியும் ஒரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தளவுக்கு நிலைமை மோசமாக என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா விவகாரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 70 சதவீத H1B விசாக்களை இந்தியர்களே பெறும் நிலையில், இது இந்தியர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிக்கல்
அப்படித்தானே மகாராஷ்டிராவைச் சேர்ந்த 32 வயதான பயோமெடிக்கல் இன்ஜினியர் தனது குடும்பத்தோடு இம்மாதத் தொடக்கத்தில் புனே வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் அமெரிக்க ஹெச்-1பி விசா இருக்கிறது. மனைவியின் விசா தேதி முடியும் நிலையில், அதைப் புதுப்பிக்க இந்தத் தம்பதி இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரியாக இந்தியா வந்த அதே நாள் மாலையில் இவர்களுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதாவது மனைவியின் ஹெச்-1பி விசா நேர்காணல் ரத்து செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதில் மாற்றுத் தேதி இல்லை எதுவும் வழங்கப்படவில்லை. டிரம்பின் கடுமையான விதிகளால் ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவும் ஒன்று.
இது தொடர்பாக அந்த நபர் தி பிரிண்ட் தளத்திடம் கூறுகையில், "எனக்கு வேறு வழியில்லை. மகனையும் மனைவியையும் நான் விட்டுச் செல்ல வேண்டும். எனது மகன் அமெரிக்காவில் பிறந்தவன் என்பதால் அவனுக்கு அமெரிக்கக் குடியுரிமை இருக்கிறது. ஆனால், அவனைப் பார்த்துக்கொள்ள என் மனைவி வேண்டும். இருப்பினும், விசா நேர்காணல் எப்போது என தெரியாததால்.. காத்திருப்பதிலும் பயனில்லை என்றே நினைக்கிறேன்" என்கிறார்.
பல ஆயிரம் பேருக்குப் பாதிப்பு
இது ஏதோ அவருக்கு மட்டும் நடந்தது இல்லை.. இவரைப் போலப் பல ஆயிரம் இந்தியர்கள் விசாவை புதுப்பிக்க இந்தியா வந்திருந்தனர். அவர்களின் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர். டிசம்பர் 15 முதல் 26 வரையிலான தேதிகளில் நடக்கவிருந்த பல விசா நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன அல்லது மறு திட்டமிடப்பட்டன.
அமெரிக்க விசா கோருவோரின் சமூக வலைத்தளங்களைப் பரிசோதிக்க வேண்டும் என டிரம்ப் கொண்டு வந்த சட்டமே இதற்குக் காரணமாகும். இதன் காரணமாகவே டிசம்பரில் நடக்கவிருந்த விசா நேர்காணல்கள், அடுத்தாண்டு மார்ச்- ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில நேர்காணல் அடுத்தாண்டு அக்டோபர் வரையிலும் கூட தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் குழப்பத்தால் பல இந்தியர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்தியர்கள் வருவதைத் தடுக்கிறார்கள்
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து புனே வந்த அந்த நபர் மேலும் கூறுகையில், "இது ஒரு எலிப்பொறி போல் இருக்கிறது. விசாவை புதுப்பிக்க நிச்சயம் தாயகம் செல்ல வேண்டும் என்றனர். இங்கு வந்தவுடன் விசாவை புதுப்பிக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துகிறார்கள். எங்களைப் போன்றவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பக் கூடாது என்பதற்காகவே இந்த விதிகளைக் கொண்டு வந்தது போல இருக்கிறது" என்றார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் டிரம்ப் இதேபோலத் தான் திடீரென விசா கட்டணத்தை உயர்த்தினார். இந்தியர்களுக்காக H-1B விசா கட்டணத்தை $5,000ல் இருந்து ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். முதலில் இந்த ஒரு லட்சம் டாலர் என்பது ஒருமுறை மட்டும் கட்டணமா இல்லை.. ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டணமா என்பதில் குழப்பம் இருந்தது.
மீண்டும் மீண்டும் குழப்பம்
டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பால் இந்தியாவில் இருந்த அமெரிக்கர்கள் பீதியடைந்தனர். பலரும் உடனடியாக அமெரிக்கா செல்ல முயன்றனர். அதேபோல அமெரிக்காவில் இருந்து தாயகம் வரவிருந்த விமானத்தில் ஏறிய பல இந்தியர்களும் கூட பயத்தில் கடைசி நிமிடத்தில் விமானத்தில் இருந்து இறங்கிவிட்டனர். அதன் பிறகே விசா விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைத்தது.
இப்போது 2 மாதங்களில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலைமை சீராக்க அமெரிக்கா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முயல்வது போலத் தெரியவில்லை. இதனால் விசாவை புதுப்பிக்கத் தாயகம் வந்த இந்தியர்கள் அனைவரும் மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாமல் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் குடும்பத்தையும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications