'எப்புட்றா'.. பாணியில் ஒரு மேஜிக்.. அமெரிக்க அம்மணி என்ன பண்ணுதுன்னு பாருங்க!
வாஷிங்டன்: சாஸ் பாட்டிலில் இருந்து வெளியே வராத சாஸை வெளியே இப்படியும் எடுக்கலாம் என்று ஒரு பெண் செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது. இதை பார்த்த பலரும் 'எப்புட்றா' என்று கேட்டு ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். அதை நீங்களும் பாருங்கள்.
தன் மேல் கவனம் விழ வேண்டும் என்று இணையதளங்கள் மற்றும் சமூக ஊடங்களில் எதையாவது செய்து தினமும் யாராவது பேசுபொருளாகிறார்கள். இதற்காக பயமுறுத்தும் வகையில் கட்டுக்கதைகள் சொல்வது முதல், சாகசம் செய்வது வரை அதற்காக எந்த எல்லைக்கும் போக டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பிரியர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் போடும் எல்லா வீடியோக்களிடம் மக்களிடம் ரீச் ஆவது இல்லை. தனித்தன்மையுடன், இப்படியும் செய்ய முடியுமா என்று மக்கள் யோசிக்கும் விஷயங்களே வேகமாக பரவுகின்றன. இதேபோல் எல்லா கட்டுக்கதைகளும் அல்லது உண்மை கதைகளும் பேசப்படுவதில்லை. மாறாக மக்களால் நம்ப முடியாத, கேள்விப்படாத வெகுசாதாரண விஷயங்களே எல்லாருமே பேசுகிறார்கள்.
ஒரு பிரச்சனைக்கு இப்படி எளிதாக செய்தால் தீர்வு கிடைக்கும் என்று வீடியோக்கள் வருவதை அதிகம் பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம், பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்று என்பது தான் உங்கள் நோக்கம். அதற்கு புதுமையான மாற்றுவழிகளை அவர்களும் சொல்கிறார்கள். அதனால் அந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கிறது. அப்படித்தான் ஒரு பெண், வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ரீச் ஆகி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கேசி ரைகர் என்ற பெண் சமீபத்தில் சாஸ் பாட்டிலை வைத்து, புத்திசாலித்தனமான முறையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த பெண் கூறும் போது, "சரி, டிக்டோக்கில் யாரோ இதைச் செய்வதைப் பார்த்தேன், பக்கா மேதை என்று அவர்களை பார்க்கும் போது தோன்றியது. எனவே, நானும் அதை முயற்சிக்கப் போகிறேன்," என்று கூறுகிறார். பின்னர் அந்த 24 வினாடி வீடியோவில், சாஸ் பாட்டிலில் மீதமுள்ள சாஸை தட்டி பார்க்கிறார். பின்னர் மூடியை தட்டி கவிழ்த்து பார்க்கிறார்.ஆனால் சாஸ் அப்படியே தான் இருக்கிறது. எதுவும் மாறவில்லை.
பின்னர் சாஸ் குறைவாக இருந்த கெட்ச்அப் பாட்டிலை, அதனுடைய அடிப்பகுதியில் இருந்து பிடித்து, இடது கையில் எடுத்து எதிரெதிர் திசையில் ஏழு முறை அந்த பெண் வேகமாக சுற்றுகிறார். பின்னர் சாஸ் இருந்த கெட்ச்அப் பாட்டில் அப்படியே கீழே எளிதாக வருகிறது. இதை பார்த்த பலரும் 'எப்புட்றா' என்று கேட்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அந்த பெண் வெளியிட்ட வீடியோவை பலரும் பார்த்த லைக் செய்திருக்கிறார்கள்.
நம்மூர் டாஸ்மாக் குடிமகன்களும் பாட்டில் மூடியை திறக்க நூதன முறையில் தட்டுவார்கள்.அதுபோல் அமெரிக்க பெண் செய்த வீடியோ, அமெரிக்காவில் பெரிய அளவில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications