இனி நாங்க "மெலோடி டீம்" மோடியுடன் செல்பி எடுத்த இத்தாலி பிரதமர்.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ
வாஷிங்டன்: அபுலியா நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்தாலி பிரதமர் வெளியிட்ட அந்த வீடியோவில், "மெலோடி குழுவில் இருந்து வணக்கம்" என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலிக்கு பயணம் சென்றார். இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

ஜி7 என்ற கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் இந்தியா இடம்பெறாத நிலையில் உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி விடுத்த அழைப்பில் பிரதமர் மோடி அங்கு சென்றார். ஒவ்வொரு முறை நடக்கும் ஜி7 மாநாட்டுக்கு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் பங்கேற்று வருகிறார்.
அபுலியா நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி உலக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்தாலி பிரதமர் வெளியிட்ட அந்த வீடியோவில், "மெலோடி குழுவில் இருந்து வணக்கம்" என்று கூறியுள்ளார்.
இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து மெலோடி டீம் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக இரு தலைவர்களும் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
இந்த புகைப்படமும் இணையத்தில் பரவி வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற COP28- உச்சி மாநாட்டின் போதும் பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி இணையத்தில் அப்போதும் டிரெண்ட் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications