அதானி ரிப்போர்ட்டை வெளியிட்டு.. பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீரென மூடல்! என்ன காரணம்
வாஷிங்டன்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டு உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பிய ஷார்ட் செல்லிங் நிறுவனம் ஹிண்டன்பர்க். உலகெங்கும் பல நிறுவனங்கள் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டு வந்த இந்த நிறுவனம், திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் நேட் ஆண்டர்சன் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஹிண்டன்பர்க்.. ஷார்ட் செல்லிங் நிறுவனமான இது, உலகெங்கும் உள்ள பிரபல நிறுவனங்கள் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பும்.

அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்
கடந்தாண்டு கூட அதானி குழுமம் குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட ரிப்போர்ட் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த ரிப்போர்ட்டிற்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகளும் கூட மிகப் பெரியளவில் சரிந்தன. அதானி குழுமம் மட்டுமின்றி அமெரிக்காவின் நிகோலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறித்தும் இந்த அமைப்பு ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளன. இதனால் அந்த நிறுவனங்கள் பங்குகள் மிகக் கடுமையாகச் சரிந்தது.
இதுபோல சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பிய பல ரிப்போர்ட்களை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடப்போவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தைத் தொடங்கிய நாதன் ஆண்டர்சன், தனது நிறுவனத்தை மூடவுள்ளதாக நேற்று புதன்கிழமை அறிவித்தார்.
மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்:
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிறுவனத்தை திடீரென மூட ஒரு குறிப்பிட்ட விஷயம் எதுவும் காரணமில்லை என்று குறிப்பிட்ட அவர், "அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை மற்றும் பெரிய தனிப்பட்ட பிரச்சினை இல்லை. இதற்காக நான் செய்யும் வேலை மிகக் கடினமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது. இதனால் உலகின் மற்ற பகுதிகள் மற்றும் நான் விரும்பும் நபர்களைச் சந்திக்க நேரமில்லாமல் போகிறது. ஹிண்டன்பர்க் என்பது என் வாழ்வின் ஒரு அத்தியாயம் தானே தவிர. அதுவே எனது வாழ்க்கை வரையறுக்கும் விஷயம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து என்ன:
நேற்று புதன்கிழமையுடன் தனது நிறுவனம் செயல்பாட்டை நிறுத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடைசிக் கட்டத்தில் மோசடி திட்டங்கள் குறித்து ரெகுலேட்டர்களிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆறு மாதங்களில், ஹிண்டன்பர்க்கின் மாடல் எப்படிச் செயல்பட்டது என்பது குறித்த வீடியோக்களை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்
இதில் ஹிண்பெர்ட் ஹிண்டன்பர்க் நிறுவனம் எப்படி விசாரணைகளை மேற்கொள்ளும் எப்படி ரிப்போர்ட்டை தயாரிக்கும் என்பது குறித்தெல்லாம் விளக்கவுள்ளனர். அவர் மட்டுமின்றி, அவரது டீமில் உள்ள அனைவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications