வானில் பேரதிசயம்.. வாழ்நாளில் ஒருமுறைதான் இது நடக்குமாம்! திடீரென மறைந்த நட்சத்திரம்.. என்ன மேட்டர்
வாஷிங்டன்: திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு திடீரென மறைந்து போனதாக வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வாக இந்த நிகழ்வு வானில் நடைபெற்று இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர்.
கற்பனைக்கும் எட்டாத பேரதிசயங்கள் வானில் நடைபெற்று வருகின்றன. பிரபஞ்சத்தில் மனிதனால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு வானியல் மாற்றங்கள் தினம்தோறும் நடந்து கொண்டிருந்தன. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவையும் இந்த பட்டியலில் தான் அடங்குகிறது. இந்த நிலையில்தான், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வு ஒன்று வானில் நடைபெற்று இருப்பதாக வானியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

பூமியில் இருந்து பார்க்கக்கூடிய நட்சத்திரங்களில் மிகவும் பிராகசமான நட்சத்திரமாக திருவாதிரை ( Betelgeuse) உள்ளது. இந்த நட்சத்திரம் சிறிது நேரம் திடீரென நள்ளிரவு மறைந்து போயிருக்கிறது. இதற்கு காரணம் லியோனா என்ற விண்கல் நட்சத்திரத்தை கடந்து சென்றதுதான். மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான், தெற்கு ஐரோப்பில் உள்ள அர்மேனியா உள்பட துருக்கி, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், மியாமி, புளோரிடா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த நிகழ்வை பார்க்க முடிந்துள்ளது.
7 முதல் 12 வினாடிகள் மட்டுமே இந்த திருவாதிரை நட்சத்திரம் மறைந்து போயிருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து இந்த நிகழ்வு நன்றாக தெரிந்துள்ளது. திருவாதிரை நட்சத்திரம் ஓரியன் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள சிவப்பு நிற பெரிய நட்சத்திரம் ஆகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வந்து எப்படி சூரிய கிரகணம் எப்படி நிகழ்கிறதோ அதேபோலத்தான் இந்த நிகழ்வும் வானில் நடந்துள்ளது.
திருவாதிரை நட்சத்திரத்தை மறைத்த விண்கல் 319 லியோனா என்பது செவ்வாய் மற்றும் ஜூபிடர் இடையே மெதுவாக சுழன்று வருகிறது. இந்த நட்சத்திரம் 80*55 கி.மீட்டர் அளவைக் கொண்டது. இந்த விண்கல், நட்சத்திரத்தை கடந்து செல்வது மிகவும் அசாதாரண நிகழ்வு என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், பூமியில் இருந்து பல தசாப்தங்களுக்கு ஒருமுறைதான் இந்த நிகழ்வை பார்க்க முடியும் என்றனர்.
மேலும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த அசாதாரண நிகழ்வு மூலம் திருவாதிரை நட்சத்திரம் பற்றியும் விண்கல் குறித்தும் புதிய விவரங்களை பார்க்க முடியும். திருவாதிரை நட்சத்திரம் என்பது டையிங் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரகாசமாக ஒளிரக்கூடிய நட்சத்திரம் ஆகும். சூரியனை விட 700 மடங்கு பெரியதும் ஆயிரக்கணக்கான மடங்கு பிரகாசமானதாகவும் இந்த நட்சத்திரம் உள்ளது. சூரியன் இடத்தில் இந்த நட்சத்திரம் வந்தால் வியாழன் கிரகத்தை தாண்டும் அளவுக்கு பெரிதாக இருக்குமாம்.
இருந்தாலும் இந்த நட்சத்திரம் சூரியனைவிட மிகவும் இளமையானது. சூரியனின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறும் நிலையில், திருவாதிரை நட்சத்திரமோ 10 மில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த நட்சத்திரம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் நீண்ட காலம் நீடிக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனால்தான் இந்த நட்சத்திரத்திற்கு டையிங் ஸ்டார் என்ற ஒரு பெயரும் உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications