ரகசிய சுரங்கம் + 132 அறை.. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் என்னென்ன வசதிகள் இருக்கு? அடேங்கப்பா
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளார். 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வெள்ளை மாளிகையில் எத்தனை அறைகள் உள்ளன? என்னென்ற சொகுசு வசதிகள் இருக்கிறது? என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அமெரிக்கா அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றார்.

இவர் அமெரிக்காவின் 45வது அதிபராக ஏற்கனவே 4 ஆண்டுகள் செயல்பட்ட நிலையில் தற்போது ஜோ பைடனை தொடர்ந்து 47 வது அதிபராக மீண்டும் செயல்பட உள்ளார். இவரது பதவிக்காலம் என்பது 2029ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி வரை உள்ளது. அதாவது அடுத்த 4 ஆண்டுகள் டொனால்ட் டிரம்ப் தான் அமெரிக்காவின் அதிபராக செயல்படுவார்.
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றதன் மூலம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மீண்டும் நுழைந்துள்ளார். இந்த வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இடமாகும். இது அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ளது. நாம் அடிக்கடி அமெரிக்க அதிபர் மாளிகை, வெள்ளை மாளிகை என்பது கேள்விபட்டு இருப்போம். ஆனால் அதில் உள்ள சொகுசு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
நம்பர் 1600, பென்சில்வேனியா அவே, வாஷிங்டன் டிசி.. இதுதான் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ முகவரியாகும். அமெரிக்க அதிபர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக இந்த வெள்ளை மாளிகை தான் உள்ளது. அமெரிக்காவின் 2வது அதிபராக செயல்பட்ட ஜான் ஆடம்ஸ் முதல் இப்போது 47 வது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரை அவர்களின் அதிகாரப்பூர்வ இல்ல அலுவலகமாக அமைந்துள்ளது.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அமெரிக்காவின் 2வது அதிபர் ஜான் ஆடம்ஸ் தான் இந்த வெள்ளை மாளிகையில் தங்கினார். அப்படியென்றால் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் எங்கு தங்கினார்? என்ற கேள்வி உங்களிடம் எழலாம். இதற்கு விடை சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் தந்தை என்று போற்றப்படும் அந்த நாட்டின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் தான் இந்த வெள்ளை மாளிகையையே உருவாக்கியவர்.

ஜார்ஜ் வாஷிங்டன் 1789 ம் ஆண்டு முதல் 1797 ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். அவர் நியூயார்க் மற்றும் பிலடெல்பியாவில் அதிபர் இல்லத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தார். அவருக்கு வாஷிங்டன் டிசி என்ற பெயரில் நகரை உருவாக்க முடிவு செய்தார். இதையடுத்து பிரெஞ்சு கட்டட கலைஞர் பியர் சார்லஸை அழைத்து வாஷிங்டன் டிசி நகரை பொட்டோமாக் நதி அருகே உருவாக்க வேண்டும். அதனை அமெரிக்கா தலைநகராக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். அதிபர் மாளிகை அமைக்க வேண்டும் உத்தரவிட்டார்.
இதையடுத்து பியர் சார்லஸ் இப்போது இருக்கும் வெள்ளை மாளிகையை விட 4 மடங்கு பெரிய அரண்மனை கட்ட திட்டம் வகுத்தார். ஆனால் அவர் திடீரென்று அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் 1792ம் ஆண்டில் உள்ளே வந்தவர் தான் ஐரிஷ் கட்டட கலை வல்லுநர் ஜேம்ஸ் ஹோபன். இவர் வெள்ளை மாளிகையை Palladian neoclassical டிசைனில் வரைபடத்தை வரைந்து வழங்கினார். அயர்லாந்தில் உள்ள டிவின் ஹவுஸ் எனப்படும் லீன்ஸ்டர் இல்லத்தின் வடிவம் போல் இது இருந்தது. இதற்கு அதிபராக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் ஒப்புதல் வழங்கினார். 1792ம் ஆண்டில் பணி என்பது தொடங்கியது.
வெள்ளை மாளிகை கட்டுவதற்காக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதியில் இருந்து மரத்தூண்கள், செங்கற்கள், கற்கள் கொண்டு வரப்பட்டன. கட்டுமான பணியில் அடிமை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். குறிப்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அடிமைகளாக பணியாற்றி வந்தனர். அவர்கள் தான் வெள்ளை மாளிகை பணியில் அதிகம் பயன்படுத்தப்பட்டனர். 8 ஆண்டுகள் பணி நடந்தது. 1800 ம் ஆண்டில் வெள்ளை மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மாளிகையை கட்டிய ஜார்ஜ் வாஷிங்டனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் தான் 2வது அதிபர் ஜான் ஆடம்ஸ் முதல் முதலாக வெள்ளை மாளிகையில் குடியேறினார்.
இந்த அதிபர் மாளிகை முதலில் அதிபர் பேலஸ், அதிபர் மான்ஷன், அதிபர் இல்லம் என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. 1901ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் தான் வெள்ளை மாளிகை என்று பெயர் சூட்டினார். இந்த வெள்ளை மாளிகை இப்போது மொத்தம் 18 ஏக்கர் நிலப்பரப்பில் 54 ஆயிரம் சதுரஅடி பரப்பில் இந்த வெள்ளை மாளிகை பரந்து விரிந்துள்ளது. 132 அறைகள் வெள்ளை மாளிகையில் உள்ளன. இதில் பேமிலி அறைகள் 16 மற்றும் ஹஸ்ட் ரூம்கள், 35 கழிவறைகள் உள்ளிட்டவையும் அடங்கும். மேலம் 412 கதவுகள், 147 ஜன்னல்கள் உள்ளன. இதுதவிர அமெரிக்காவில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் அதில் இருந்து தற்காத்து கொள்ள 28 Fire places வசதிகள் உள்ளது. 8 ஸ்டேர்கேசஸ், 3 எலிவேட்டர்கள் உள்ளன.
அதோடு நீச்சல் குளம், காய்கறி தோட்டம் உள்ளது. வெள்ளை மாளிகையின் சமையலறை மிகவும் பெரியது. ஒரேநேரத்தில் 140 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். 42 இருக்கையுடன் அதிநவீன வசதி கொண்ட தியேட்டர் உள்த. டென்னிஸ், பஸ்கட்பால், பவுலிங் கோட்டுகள் உள்ளனர். கோல்ப் மைதானம் உள்ளது. இந்த வெள்ளை மாளிகையின் கிழக்கு விங்க் என்ற பகுதியில் தான் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. மேற்கு விங்க் என கூறப்படும் பகுதியில் அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை ஓவல் அலுவலகம் என்று கூறுவார்கள். இங்கு இருந்து தான் அமெரிக்க அதிபர் தனது அலுவல் பணியை மேற்கொள்வார்.
இந்த வெள்ளை மாளிகையில் சுரங்க பாதைகள் உள்ளன. 2ம் உலகப்போர் நடந்த காலத்தில் அதிபர் பாதுகாப்புக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையின் மேற்கு(அதிபரின் அலுவலகம்) மற்றும் கிழக்கு (அதிபர் இல்லம்) பகுதியை இணைக்கும் வகையில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் வழியாக பாம்ப் ஷெல்டர் (Bomb Shleter)அல்லது பங்கர் (Bunker) என அழைக்கப்படும் பகுதிக்கும் செல்லலாம். அதாவது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதிபர் இந்த பங்கருக்குள் சென்று தப்பிக்க முடியும்.
வெள்ளை மாளிகையில் வசிக்கும் அதிபர், அதிபரின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு பல சலுகைகள் உண்டு. தனியாக சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகையில், வெளிச்சம் வர வேண்டுமென்பதற்காக ஏராளமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்கும். புல்லட் புரூப் மற்றும் ஷட்டர்புரூப் வசதிகள் உள்ளன. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஜன்னல்கள் எப்போதும் மூடியே இருக்கும்.
இந்த வெள்ளை மாளிகையில் ப்ளூ ரூம், ரெட் ரூம், கிரீன் ரூம் என்று தனித்தனி பெயர்களில் அறைகள் உள்ளன. பெயர்களுக்கு ஏற்ப அந்த அறைகளின் நிறங்கள் இருக்கும். இந்த வெள்ளை மாளிகை என்பது ஒவ்வொரு முறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது வெள்ளை மாளிகைக்கு வரும் அதிபர்கள் தங்களுக்கு பிடித்த வகையில் கட்டத்தின் உள்ளே சிறுசிறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இந்த வெள்ளை மாளிகையின் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் வெளிப்புறத்தை முழுவதுமாக பெயிண்ட் அடிக்க வேண்டும் என்றால் 570 Gallons பெயிண்ட் தேவைப்படும். ஒரு Gallons என்பது மூனேமுக்கா லிட்டரை குறிக்கும். அப்படியென்றால் வெள்ளை மாளிகையின் வெளிப்புறத்துக்கு மட்டுமே மொத்தம் 2 ஆயிரத்து 157 லிட்டர் பெயிண்ட் தேவைப்படும்.
அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் பாதுகாப்பிற்கு சீக்ரெட் சர்வீஸ் பிரிவினர் தான் பொறுப்பு. ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகையை சுற்றிய பாதுகாப்பு பணியில் யுனைடெட் ஸ்டேட்ஸ் பார்க் போலீசார் உள்ளனர். யுனிபார்மிடு டிவிசன் எனும் இந்த பிரிவில் மொத்தம் 1,300 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இந்த வெள்ளை மாளிகைக்கு ஆண்டுக்கு 5 லட்சம் விசிட்டர்கள் வந்து செல்கின்றனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications