உருளை கிழங்கில் வீடு கட்ட முடியுமாம்..பூமியில் இல்லீங்க.. செவ்வாய் கிரகத்தில்..விஞ்ஞானிகள் தகவல்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் வீடுகள் கட்ட உருளைகிழங்குகள் மூலம் தயாரிக்கப்படும் ஸ்டார் கிரீட் போதுமானது என்று இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி தூசு, உப்பு, உருளைக்கிழங்கு மாவு போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஸ்டார் கிரீட் தயாரிக்கப்படுகிறது.
நாம் வாழும் இந்த பூமி போல சூரிய குடும்பத்தில் உள்ள வேறு கோள்களில் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா ? என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சூரியக் குடும்பத்தில் 4-வது இடத்தில் இருக்கும் கோளான செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ கூட விண்கலன்களை அனுப்பியது. அதேபோல், நாசா உள்பட விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்வேறு நாடுகளும் செவ்வாய் கிரகத்தை கூடுதலாக கவனம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது.சூரிய குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விட செவ்வாய் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

ஒரு வருடம் என்பது 687 நாட்கள்
செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை அதன் மொத்த அளவு பூமியில் பாதி என்பது கவனிக்கத்தக்கது. செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். பூமியின் கணக்குப் படி செவ்வாய் கிரகத்தில் ஒருவருடம் என்பது 687 நாட்களாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தடங்கள் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் இருக்கிறதா.. உயிரினங்கள் இருந்தனவா.. என பல ஆய்வுகள் நடக்கிறது.

உருளைக்கிழங்கு மூலம் கட்டமைப்புகள்
அதேபோல், செவ்வாயில் கட்டமைப்புகளையும் மேற்கொள்வது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு மூலம் கட்டமைப்புகள் மேற்கொள்ள முடியும் என்றும் இந்த கட்டமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கும் எனவும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கனரக பொருட்களை..
உருளைக்கிழங்கு மாவு மற்றும் அதனுடன் விண் தூசுகள், உப்பு போன்றவற்றின் கலவை மூலம் உருவாக்கப்படும் StarCrete மூலம் இந்தக் கட்டமைப்புகள் மூலம் செவ்வாய்கிரகத்திற்கு கனரக பொருட்களை கொண்டு செல்ல உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வழக்கமான கான்கிரீட் கலவையை விட இதுவும் மிகவும் கடினமானதாக அதாவது 32 மெகாபக்சல்கள் அளவுக்கு வலுவானது என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications