"5000 பெண்கள்.." சாட் ஜிபிடி வந்ததும் மொத்தமாக மாறிய டேட்டிங் வாழ்க்கை.. கடைசியில் என்னாச்சு பாருங்க
வாஷிங்டன்: வெளிநாட்டில் இளைஞர் ஒருவருக்குத் தேவையான பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையை முழுக்க முழுக்க சாட் ஜிபிடி பார்த்துள்ளது இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் ஏஐ வளர்ச்சி படுவேகமாக இருந்து வருகிறது. சாட் ஜிபிடி நாம் கனவிலும் நினைக்காத வகையில் பல விஷயங்களில் உதவுகிறது. அப்படிதான் இங்கே ஒருவருக்கு வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க சாட்ஜிபிடி உதவி இருக்கிறது.

சாட் ஜிபிடி: இதற்கிடையே சாட் ஜிபிடி ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவருக்கு விரும்பிய துணையைக் கண்டறிய உதவி இருக்கிறது. 23 வயதான சாப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன் என்பவர் டிண்டர் தளத்தில் தனக்கான துணையைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவருக்கு செட் ஆகாத பெண்களை நீக்கவே அவர் சாட் ஜிபிடி உதவியை நாடியுள்ளார். அதுவே அவரது தற்போதைய வாழ்க்கைத் துணையான கரினா இம்ரானோவ்னாவை சந்திக்க உதவி இருக்கிறது.
5000 பெண்கள்: சாட் ஜிபிடியிடம் உதவி கேட்கும் முன்பு அந்த பர் சுமார் 5000 பெண்களைச் சந்தித்து இருப்பாராம். இருப்பினும் யாருமே அவருக்கு செட் ஆகவில்லையாம். இது தொடர்பாக அவர் கூறுகையில், "என்னைப் பற்றி சாட் ஜிபிடியிடம் சொன்னேன்.. முதலில் சாட் ஜிபிடிக்கு என்னைப் பற்றித் தெரியாது என்பதால் அது ஏதேதோ சொன்னது. நான் அதனிடம் தொடர்ந்து என்னைப் பற்றிச் சொல்லியே வந்தேன். அதன் பின்னரே அது எனக்கேற்ற பெண்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்தது.

மோசமான மற்றும் செட் ஆகாத பெண்களை அதுவே நீக்கியது.. மேலும், சரியான பெண்களைத் தேர்வு செய்து அவர்களுடன் டேட்டிங்கை புக் செய்ததும் சாட் ஜிபிடி தான். இப்போது எனது மனைவியைத் தேர்வு செய்து எங்களை சந்திக்க வைத்தும் சாட் ஜிபிடி தான். மேலும், நான் பிரபோஸ் செய்யவும் கூட உதவியது அதுதான். இது அந்தளவுக்கு எனக்கு மிகப் பெரியளவில் உதவியது" என்றார்.
டேட்டிங் வாழ்க்கை: சாட் ஜிபிடி உள்ளே வந்த பிறகு தான் இவரது டேட்டிங் வாழ்க்கை மொத்தமாக மாறியுள்ளது. சாட் ஜிபிடி உள்ளே வந்த உடன் அவர் கரினா என்ற பெண்ணை சந்தித்தார். அப்போது முதலில் ஏஐ மூலமாகவே அந்த பெண்ணுடன் பேசியுள்ளார். இருப்பினும், சில நாட்களிலேயே கரினா தான் தனது வாழ்க்கைத் துணையாக இருக்கப் போகிறார் என்பது இவருக்குத் தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் சாட் ஜிபிடி தான் அந்த பெண்ணுடன் எங்குச் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று என்பதை இவருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது.
இப்படியே சில காலம் சென்ற நிலையில், கடந்தாண்டு இறுதியில் சாட் ஜிபிடி முக்கிய அட்வைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது கரினா உடனான உறவு சீரானதாகவும் வலுவாகவும் உள்ளதால் இப்போது ப்ரபோஸ் செய்தால் சரியாக இருக்கும் எனச் சொல்லியுள்ளது. சாட் ஜிபிடி சொன்னபடியே ஜாதன் ப்ரோபோஸ் செய்ய அதற்கு கரினாவும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பிறகு என்ன இருவருக்கும் டும் டும் டும் தான்.
அடிச்சது யோகம்: ஆனால், தனது காதல் வாழ்க்கையில் சாட் ஜிபிடிக்கு இவ்வளவு பெரிய பங்கு இருக்கிறது என்பது கரினாவுக்கு தெரியாதாம். இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகே ஜாதன் அதை கரினாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், இப்போதும் கூட கரினா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இது ஒன்றே போதும் ஏஐ எனக்குச் சரியான பார்ட்னரை தான் தேர்வு செய்துள்ளது என்றும் பிடித்த நபருடன் இருப்பது தான் யோகம் சொல்ல என்கிறார் ஜாதன்.
ஜாதன் மேலும் கூறுகையில், "இதுதான் எனது கதை.. ஒருவர் முயன்றால் உலகில் இருக்கும் அனைவருக்கும் சரியான ஒரு நபரைத் தேர்வு செய்ய பிரோகிராமை உருவாக்க முடியும்.. ஆனால் இது வெறுமன பொருளாதார கணக்குகளைப் போடும் ஈஸியான வேலை இல்லை. பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் " என்று அவர் தெரிவித்தார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications