எலான் மஸ்கின் திமிர்.. 8 டாலர் போலி ப்ளூ டிக்கால்.. ஓவர் நைட்டில் 1.28 லட்சம் கோடியை இழந்த நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெறும் 8 டாலரை வைத்துக் கொண்ட பிரபல அமெரிக்க மருந்து நிறுவனத்தில் 15 பில்லியன் டாலரை நெட்டிசன் ஒருவர் காலி செய்துவிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தடுமாறிக் கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தைச் சமீபத்தில் தான் எலான் மஸ்க் வாங்கினார். அப்போது முதலே அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதல் நாளே டாப் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்த எலான் மஸ்க், அத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 ட்விட்டர்

ட்விட்டர்

அத்துடன் ட்விட்டர் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்தார். அப்படி அவர் அறிவித்த திட்டங்களில் ஒன்றுதான் ப்ளு டிக்கிற்கான கட்டணம். பொதுவாக ட்விட்டரில் பிரபலமாக உள்ளவர்கள் பெயரில் ஏகப்பட்ட போலிக் கணக்குகள் உருவாகும். இதனால் யூசர்கள் ஏமாறாமல் இருக்கப் பிரபலங்களின் உண்மையான கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக்கை வழங்கும். இது முற்றிலும் இலவசமான ஒன்றாகவே இருந்தது.

 ப்ளு டிக் கட்டணம்

ப்ளு டிக் கட்டணம்

இதை மாற்றுவதாக அறிவித்த எலான் மஸ்க், ப்ளூ டிக் வசதி பெற மாதம் எட்டு டாலரை தர வேண்டும் அதிரடியாக அறிவித்தார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யார் வேண்டுமானாலும் எட்டு டாலரை பெற்றுக் கொண்டு ப்ளு டிக்கை பெறலாம் என்ற நிலை உருவானால், போலிக் கணக்குகளும் ப்ளூ டிக்கை பெறும் என்று பலரும் கூறினர். இருப்பினும், யார் சொல்லியும் கேட்காமல் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் என்பதை எலான் மஸ்க் கொண்டு வந்தார்..

 யூடர்ன்

யூடர்ன்

இதனால் பல்வேறு போலிக் கணக்குகளுக்கும் ப்ளூ டிக் வசதியைப் பெற்றுக் கொண்டனர். ஏசு கிறிஸ்துவின் பெயரில் எல்லாம் போலிக் கணக்குகள் ப்ளூ டிக் வசதியைப் பெற்றனர். தான் மிகப் பெரிய தவறை செய்ததா உணர்ந்த ட்விட்டர் நிறுவனம் உடனடியாக ப்ளூ டிக் கட்டண முறையை நிறுத்தியது. இருப்பினும், அதற்குள் பலரும் ப்ளு டிக் பெற்றனர். இதில் நடந்த குளறுபடியில் ஒரு நிறுவனம் ஓவர் நைட்டில் ரூ. 1.28 லட்சம் கோடியை இழந்து உள்ளது.

 எலி லில்லி

எலி லில்லி

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்து நிறுவனம் எலி லில்லி. இன்சுலின் தயாரிக்கும் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் இன்சுலின் உற்பத்தியில் டாப் மூன்று இடங்களுக்குள் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே @LillyPad என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு உள்ளது. அதற்கு ப்ளு டிக் வசதியும் கூட உள்ளது. இருப்பினும், @EliLillyandCo என்ற பெயரில் சிலர் ஒரு கணக்கை உருவாக்கி வெறும் 8 டாலர் கொடுத்து ப்ளு டிக்கை வாங்கி உள்ளனர்.

 வெறும் 8 டாலர்

வெறும் 8 டாலர்

8 டாலர் ப்ளு டிக்கை வாங்கிய உடன் அவர்கள் ஒற்றை ட்வீட்டை பதிவிட்டுள்ளனர். "இனிமேல் அனைவருக்கும் இலவசமாக இன்சுலின் வழங்குவதில் எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி" என்று ஒரு ட்வீட்டை போகிற போக்கில் தட்டிவிட்டு உள்ளனர். இதைப் பார்த்ததும் பதறிய முதலீட்டாளர்கள் எலி லில்லி பங்குகளைச் சரமாரியாக விற்கத் தொடங்கினர். இன்சுலினில் இருந்து தான் அந்த நிறுவனம் பெரும் லாபம் சம்பாதிக்கும் நிலையில், அதை இலவசமாகக் கொடுத்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனப் பங்குகளை விற்கத் தொடங்கினர்.

 1.28 லட்சம் கோடி நஷ்டம்

1.28 லட்சம் கோடி நஷ்டம்

இதனால் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தது. இதனால் அந்நிறுவனத்தின் 15 பில்லியன் டாலர் மதிப்பு ஓவர் நைட்டில் சரிந்தது. அதாவது இந்திய மதிப்பில் 1.28 லட்சம் கோடியை ஒரே நாளில் அந்நிறுவனம் இழந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த நிறுவனம் போலிக் கணக்கில் இருந்து வந்த ட்வீட் குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், அதற்குள் 1.28 லட்சம் கோடி போய்விட்டது.

 மஸ்கே காரணம்

மஸ்கே காரணம்

ஒற்றை கணக்கில் இருந்து வந்த இந்த ஒற்றை ட்வீட் ஒரே நாளில் 1.28 லட்சம் கோடியை அழித்துள்ளது. அது மட்டுமின்றி மற்ற இன்சுலின் உற்பத்தியாளர்களான நோவோ நார்டிஸ்க் மற்றும் சனோஃபி நிறுவனங்களின் பங்குகளும் முறையே 3.2 சதவீதமும், 4 சதவீதமும் சரிந்தது. அனைவரும் பல முறை எச்சரித்தும் அடாவடியாக ப்ளு டிக்கிற்கு கட்டணம் என்பதை மாற்றிக் கொள்ளாமல் இருந்த எலான் மஸ்கே இதற்குக் காரணம் என்று பலரும் சாடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+