ஒர்க் ஃப்ரம் ஹோமால் இப்படியும் நடக்குமா! 16 கோடி சம்பாதித்த கணவர்! ஆனால் விவாகரத்து கேட்ட மனைவி! ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சில வாரங்களில் 16 கோடி ரூபாயைச் சம்பாதித்த நபரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார் அவரது மனைவி.. என்ன காரணம்.. ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே வெளிநாடுகளில் பல வினோதமான சம்பவங்கள் நடக்கும்.. அதிலும் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் பார்த்தால் இது என்ன லிஸ்ட்லயே இல்லையே என்பது போலத் தான் நமக்கு இருக்கும்.

பல கோடி வருமானம்: அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மனைவி ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்து வந்த நிலையில், அவரது கணவர் சில வாரங்களில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ஆனாலும் கூட அவரது செயலால் கடுப்பான அவரது மனைவி விவாகரத்து கோரியுள்ளார். அதற்கான காரணம் என்ன.. அங்கே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டைலர் லூடன் என்ற நபரும் அவரது மனைவியும் டெக்சாஸில் வசித்து வந்துள்ளனர். டைலர் லூடனின் மனைவி அங்குள்ள முக்கியமான தனியார் நிறுவனமான டிராவல் செண்டர் ஆப் அமெரிக்கா என்ற நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு அனைவரையும் போலவே அவரும் ஒர்க் ஃபரம் ஹோமில் தான் வேலை செய்து வந்துள்ளார். அவர் பணியாற்றி வந்த டிராவல் செண்டர் ஆப் அமெரிக்கா மற்றொரு நிறுவனத்தை வாங்க திட்டமிட்டிருந்தது.
என்ன நடந்தது: அந்த டீல் வெற்றிகரமாக முடிந்தால் டிராவல் செண்டர் ஆப் அமெரிக்காவுக்கு அது மிக பெரிய லாபத்தைத் தரும். டைலர் லூடனின் மனைவி தான் இந்த டீலிங்கை கவனித்து வந்துள்ளார். ஒர்க் ஃபர்ம் ஹோம் என்பதால் அவர் தனது அனைத்து மீட்டிங்குகளையும் வீட்டில் இருந்தே நடத்தியுள்ளார். இதையெல்லாம் பக்கத்து ரூமில் இருந்து கேட்ட டைலருக்கு பொறி தட்டி இருக்கிறது.
இந்த டீல் முடிந்தவுடன் டிராவல் செண்டர் ஆப் அமெரிக்காவின் பங்குகள் மிக பெரியளவில் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து கொண்ட டைலர், சத்தமின்றி அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறார். தனது ஓய்வூதிய பணத்தை எல்லாம் எடுத்து மொத்தமாக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல டீல் குறித்த தகவல் வந்தவுடன் அந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளது.
மனைவிக்குத் தெரியாதாம்: இதன் மூலம் அவர் சுமார் 2 மில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாயாகும். இதை எல்லாம் அவர் தனது மனைவிக்குத் தெரியாமலேயே செய்துள்ளார். இது பார்க்கச் சாதாரணமாக விஷயமாகத் தெரிந்தாலும், இது அமெரிக்க சட்டப்படி மிகப் பெரிய சட்ட விரோதம். நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்ததன் மூலம் அவர் டிரேட் செய்து லாபம் பார்த்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் என்ன செய்தேன் என்பதை அவர் தனது மனைவியிடம் சொல்லியுள்ளார். கணவரை நம்பி மிக முக்கிய கால்களை வீட்டில் இருந்து பேசியது இப்படி ஆகிவிட்டதே என ஆத்திரமடைந்த அந்த பெண் உடனே வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டாராம். மேலும், விவகாரத்துக் கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வழக்கு: தொடர்ந்து அந்நாட்டின் விசாரணை அமைப்புகளும் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து டைலர் தான் இந்த டிரோட் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் திரும்பச் செலுத்த ஒப்புக்கொண்டார். இது தவிர கூடுதலாக பைன் கட்டவும் அவர் ஒப்புக் கொண்டார். அதன் பின்னரே வழக்கு விசாரணையை அதிகாரிகள் முடித்துள்ளனர். ஒர்க் ஃபர்ம் ஹோம் பார்க்கும் போது இப்படி கூட பிரச்சினை வருமா என நெட்டிசன்கள் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications