ஜெயிலுக்கு போன பின்.. மொத்தமாக மாறிய சீன்.. ஒரே ஒரு போட்டோவால் டிரம்பிற்கு குவிந்த நன்கொடை! சூப்பர்
வாஷிங்டன்: கடந்த வாரம் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு அவருக்கு நாலா புறமும் இருந்து நன்கொடை குவிந்து வருகிறது. இது அவரது இமேஜை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வே சுவாரசியமாக இருக்கும். அங்கு இரண்டு கட்சிகள் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

இரு கட்சி சார்பிலும் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு இடையே உட்கட்சியில் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னரே ஒருவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்..
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை அங்கே ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகவிட்டது. அதேநேரம் குடியரசு கட்சியில் சார்பில் அங்குப் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அனைவரையும் தாண்டி அங்கே டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. குடியரசு கட்சியினர் மற்றும் பழமைவாதிகள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது.
இதனிடையே டிரம்ப் கடந்த வாரம் தேர்தல் முறைகேடு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அதாவது கடந்த 2020இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்ப் தோல்வியடைந்தார். இருப்பினும், தேர்தலில் தான் மாபெரும் முறைகேடு நடந்ததாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டினார். தேர்தலில் முறைகேடு நடக்க எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவர் முறைகேடு நடந்ததாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டினார். டிரம்ப் ஆதரவாளர்களும் இதை உண்மை என்றே நம்பினர்.
வன்முறை: ஒரு கட்டத்தில் டிரம்ப் சொன்னதை உண்மை என நம்பிய ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட நுழைந்தனர். ஜோ பைடனை அதிபராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் இந்த வன்முறை ஏற்பட்டது. இதில் சிலர் உயிரிழக்கவும் கூடச் செய்தனர். இது அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டில் தான் டிரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கைதான போது ஜார்ஜியா சிறையில் வைத்து கைதிகளுக்குச் செய்யப்படும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. முதலில் டிரம்பின் கைரேகைகளை அவர்கள் எடுத்தனர். அதன் பின்னர் அவரது உயரம் மற்றும் எடையைக் குறித்து வைத்துக் கொண்டனர். தொடர்ந்து கைதிகளுக்கு எடுக்கப்படுவதைப் போல போட்டோக்களையும் அவர்கள் எடுத்தனர். இந்தப் போட்டோ தான் இப்போது டிரம்பிற்கு பாசிட்டிவாக மாறியுள்ளது.

நன்கொடை: அதாவது சிறையில் எடுத்த படம் ரீலிசான பிறகு அவருக்கு நன்கொடை குவிந்து வருகிறதாம். அதாவது அந்த போட்டோ வெளியான பிறகு சில நாட்களில் மட்டும் டிரம்பிற்கு $7.1 மில்லியன் நிதி குவிந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 58 கோடியாகும். கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ட்ரம்பிற்கு சுமார் $20 மில்லியன் அதாவது 165 கோடி நன்கொடை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அவர் ஜார்ஜியாவில் கைதான நாளில் மட்டும் அவருக்கு $4.18 மில்லியன் நன்கொடை வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 38 கோடி ரூபாய் ஆகும். டிரம்பின் கைது அவருக்கு எதிராகப் போகலாம் என்று முதலில் பலரும் கணித்திருந்தனர். இருப்பினும், அதற்கு நேர்மாறாகவே நடந்துள்ளது. டிரம்பின் கைது அவரது இமேஜை உயர்த்தியே இருக்கிறது. அதேபோல சிறையில் எடுக்கப்பட்ட டிரம்பின் படங்கள் இருக்கும் டீ சர்ட், பேக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
-
வாய்ப்பில்லை ராஜா வாய்பில்லை! ஈரானை இறங்க வைக்க முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட அதிபர்! -
Venezuela-வில் வெடிக்கும் பிரச்சனை.. டிரம்ப்-க்கு புது சிக்கல்.. ஈரான் போர் முடிவதற்குள் அடுத்ததா -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்! -
ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங் -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
மேற்காசிய போருக்கு நடுவே.. திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. ஆலோசித்தது என்ன? -
அமெரிக்காவை எதிர்க்க தயாராகும் ஈரான்.. முக்கியமான பிளான் ரெடி! ரஷ்யா, சீனா, மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் -
டிரம்ப் அதிரடி: ஈரான் போர் முடிவுக்கு வருகிறது.. பாகிஸ்தானில் 2வது மீட்டிங் விரைவில்












Click it and Unblock the Notifications