நடுவானில் மாயமான விமான மேற்கூரை! பறந்து போன பணிப்பெண்! அலறி துடித்து பயணிகள்! அடுத்து நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மேற்கூரை அப்படியே பறந்த நிலையில், அடுத்து யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் அதில் நடந்துள்ளது.

பொதுவாக மற்ற அனைத்து போக்குவரத்தைக் காட்டிலும் விமான போக்குவரத்து என்பது ரொம்பவே பாதுகாப்பானது. விமானத்தில் ஏகப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதால் இதில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

How A US Plane Landed Safely After Losing Its Roof Mid-Flight a Miracle Story

இருப்பினும், சிறு விபத்து ஏற்பட்டாலும் கூட அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இங்கே அமெரிக்காவில் யாராலும் நம்பவே முடியாத ஒரு சம்பவம் நடந்துள்ளது.

விமானம்: அங்கே அலோஹா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் மேற்கூரை நடுவானில் பறந்த போதிலும், அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய அதிசயம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்துள்ளது. இந்த விமானத்தில் 89 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்துள்ளனர். அப்போது இந்த ஜெட் விமானத்தின் மேற்கூரையின் ஒரு பெரிய பகுதி நடுவானில் அப்படியே பறந்துவிட்டது.

இதனால் உள்ளே இருந்த பயணிகள் மட்டுமின்றி, விமானியும் கூட அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை. இரட்டை எஞ்சின், 110 இருக்கைகள் கொண்ட போயிங் 737-200 என்ற வகை விமானத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் விமானத்தின் பயண நேரம் 40 நிமிடங்களாகவே இருந்தது. அப்போது நடுவானில் திடீரென விமான கேபின் அழுத்தத்தை இழந்தது. விமானத்தின் மேற்கூரையும் அப்படியே பறந்த நிலையில், மேலே எந்தவொரு பகுதியும் இல்லாமல் விமானம் இருந்துள்ளது.

உறைந்து போன பயணிகள்: அப்போது விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த கிளாராபெல் லான்சிங் என்ற பெண் அப்படியே பறந்து போனார். இதையெல்லாம் பார்த்த பயணிகளும் மற்ற பணிப் பெண்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பசிபிக் பெருங்கடலுக்கு மேலே 24,000 அடி உயரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் யாருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதன் பிறகு நடந்தது தான் அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

அந்த விமானம் 24,000 அடியில் பறந்து கொண்டிருந்த நிலையில், பைடல் கஹுலுய் ஏர்போர்ட்டில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். அப்போது விமானத்தின் என்ஜினில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விமானி திறமையாகச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

காப்பாற்றிய சீட் பெல்ட்: விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்த நிலையில், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த போது அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் அந்த ஒரு பணிப் பெண் மட்டும் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது. இதுவரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

விமானத்தில் கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்வியும் திடீரென ஏற்பட்ட டிகம்ப்ரஷனும் தான் இந்த மோசமான விபத்திற்குக் காரணம் என்று அமெரிக்கத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இடதுபுற என்ஜின் தோல்வியடைந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானத்தில் ஏறும் போது விமானத்தின் உடல் பகுதியில் விரிசல் இருப்பதைப் பயணி ஒருவர் கவனித்துள்ளார். இருப்பினும், அதைப் பெரிதாக அவர் எடுத்துக் கொள்ளாததால் அதை விமான ஊழியர்களிடம் கூறவில்லை. அவர் கூறியிருந்தால் கூட இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+