அடப்பாவமே.. மொத்தமா பறிபோன "பார்வை!" சொட்டு மருந்து விடும் போது.. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
வாஷிங்டன்: பெண் ஒருவர் கண் சொட்டு மருந்தைக் கவனிக்காமல் போட்டது அவரது கண் பார்வையையே பறித்துவிடும் அளவுக்கு மோசமானதாக மாறியுள்ளது.
மருத்துவம் சார்ந்த பொருட்களை நாம் மிகவும் கவனமாகவே பயன்படுத்த வேண்டும்.. ஏனென்றால் மருந்துகள் மாறினாலோ அல்லது அதன் அளவு மாறினாலும் கூட அது நமக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போது இந்த காலத்தில் பெரும்பாலானோர் எந்தவொரு வேலை செய்தாலும் அதில் 100% கவனம் செலுத்துவதில்லை. இதனால் சில நேரங்களில் நாம் மிக மோசமான சூழலுக்கும் கூட தள்ளப்படுகிறோம்.

அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. இதனால் அந்த பெண் ஒட்டுமொத்தமாகத் தனது கண் பார்வையையே இழந்துள்ளார். வீட்டில் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன்பு அதன் லேபிளை கட்டாயம் ஏன் படித்துப் பார்க்க வேண்டும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. இந்தச் சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு பாடமாகவே இருக்கிறது.
22 வயதான லிட் என்ற பெண் தனக்கு என்ன நடந்தது என்பதை வீடியோ மூலம் விளக்கியுள்ளார். எந்தவொரு மருந்தையும் எடுத்துக் கொள்ளும் முன்பு லேபிளில் போட்டிருப்பதை முழுமையாகப் படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவருக்குக் கண்ணில் ஏதோ பிரச்சினை ஏற்படவே மருத்துவர்கள் கண்ணுக்குச் சொட்டு மருந்தை வழங்கியுள்ளனர்.
அப்படியொரு சமயம் சொட்டு மருந்தைப் போடுவதற்குப் பதிலாக அவர் அதேபோல இருந்த சூப்பர் க்ளூவை எடுத்து கண்களில் விட்டுக் கொண்டார். கண்ணில் அதை விட்ட உடனேயே அவருக்குப் பொறுக்க முடியாத கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கண்ணில் விட்டது சொட்டு மருந்து இல்லை சூப்பர் க்ளு என கண்டறிந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
அவரால் சற்று நேரம் எதையும் பார்க்கவே முடிவில்லை. தற்காலிகமாகக் கண் பார்வையையே இழந்தார். சூப்பர் க்ளுவால் கண் ஒட்டப்பட்ட போது எப்படி இருந்தது, இப்போது கண்கள் எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலும் அவர் படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், அவருக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதையும் வீடியோவாக பதிவு செய்து அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வித ஆயின்மெண்டை கொடுத்து அந்த சூப்பர் க்ளுவை கரைய வைக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அது அவர்களுக்குப் பயன் தரவில்லை.
இறுதியில் அருகே இருந்த தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ கருவிகளைக் கொண்டு அவரது கண்கள் திறக்கப்பட்டது. இருப்பினும், அப்போது மிகக் கடுமையான வலி இருந்ததாகவும் தான் அலறிய சத்தத்தில் மருத்துவமனையே மிரண்டுவிட்டதாகவும் அவர் மற்றொரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சூப்பர் க்ளூவையும் கண் சொட்டு மருந்தையும் ஏன் அவர்கள் ஒரே போல வடிவமைக்கிறார்கள் இது மோசமான விபத்துகளுக்குக் காரணமாக அமையும் என்று நெட்டிசன்கள் பலரும் சாடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 2021இல் இப்படி தான் டெசிகா பிரவுன் என்ற பெண் தனது முடிக்கு சூப்பர் குளுவை பயன்படுத்தினார். இதனால் அவரது முடி மிகவும் கடினமானதாக மாறியது. இறுதியில், அவள் தலையில் இருந்து பிசினை அகற்ற அறுவை சிகிச்சை கூடச் செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications