டிரைவர் நிர்வாணம்! பின் சீட்டில் உற்று பார்த்தால்.. தெரிந்த அந்த உருவம்! ஒற்றை போட்டோவால் செம ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஏலியன் குறித்து தகவல்கள் வெளியாவது முதல்முறை இல்லை என்றாலும் கூட, இப்போது வெளியாகி உள்ள ஃபோட்டோ பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

இவ்வளவு பெரியதாக விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறு பல கிரகங்களிலும் கூட உயிரினங்கள் வசிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே இங்கு பல்வேறு ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக உலகெங்கும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நாசா இது பற்றி மிக நீண்ட ஆய்வை நடத்தி வருகிறது.

ஏலியன்

ஏலியன்

குறிப்பாக சில ஆய்வாளர்கள் நமது பூமிக்குக் கடந்த காலங்களில் கூட ஏலியன்கள் வந்து இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இப்போதும் கூட பூமியில் ஏலியன்கள் மறைந்து இருக்கலாம் அல்லது மனிதர்களைப் போலவே இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். சமீபத்தில் ஏலியன்களின் வாகனங்களாகக் கருதப்படும் பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வு செய்யவும் கூட நாசா தனியாக ஒரு குழுவை அமைத்து இருந்தது.

 அமெரிக்கா

அமெரிக்கா

இதனிடையே அமெரிக்காவில் கூகுள் எர்த் செயலி மூலம் பெண் ஒருவர் காரை பார்க்கும் போது, அங்கு ஏலியன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூகுள் நிறுவனம் வழங்கும் பல நூறு சேவைகளில் இந்த எர்த் சேவையும் ஒன்றாகும். இதன் மூலம் நாம் பூமியில் இருக்கும். இதில் பூமியின் பல்வேறு பகுதிகள் தொடர்பான புவியியல் குறித்த தகவல்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இதில் தான் அந்த பெண் ஏலியனை பார்த்து உள்ளார்.

 கூகுள் எர்த்

கூகுள் எர்த்

கூகுள் எர்த் செயலியைப் பயன்படுத்தி அவர், அமெரிக்காவின் மைனேயில் பகுதியில் இருக்கும் கடையை எர்த் செயலியில் பார்த்து உள்ளார். அருகே நின்று கொண்டிருந்த காரை எதேச்சையாகப் பார்த்து உள்ளார். அந்த காரை ஜூம் செய்து பார்த்த போது தான், பின் சீட்டில் ஏலியன் போன்ற ஒன்று இருந்ததை அவர் பார்த்து உள்ளார். இது தொடர்பான படத்தை அவர் இணையத்திலும் ஷேர் செய்து உள்ளார்.

 நிர்வாணம்

நிர்வாணம்

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "முதலில் அந்த காரை தான் நான் பார்த்தேன். ஓட்டுநர் நிர்வாணமாக இருப்பதைப் போல தெரிந்தது. இதனால் என்ன தான் இருக்கிறது எனப் பார்க்க ஜூம் செய்தேன். பின் சீட்டில் இருந்த உருவம் சிதைந்து இருந்தது. அப்போது தான் அது ஏலியனாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். எனது வீட்டின் அருகே இருக்கும் கடை ஒன்றைத் தேடும் போது தான் நான் இதைக் கண்டுபிடித்தேன்" என்று பதிவிட்டு உள்ளார்,

 ஏலியன் தான்

ஏலியன் தான்

இதற்கு இணையத்தில் பலரும் பல்வேறு வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் அந்த ஃபோட்டோவில் பின்னால் அமர்ந்து இருப்பது ஏலியன் போலவே தெரிவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். இருப்பினும், பின்னால் இருப்பது ஒரு மனிதரா இல்லை ஏலியனா என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. பின்னால் இருப்பவரின் படம் சிதைத்து உள்ளதால் அது யார் எனத் துல்லியமாகத் தெரியவில்லை.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமும் இதேபோல கூகுள் மேப்பில் இருந்த ஒரு படம் வெளியானது. அதில் நடுரோட்டில் கவச உடை அணிந்தவாறு ஒரு உருவம் தெரிகிறது. ஆனால், அதன் உள்ளே யாருமே இல்லை. இந்த படம் ஏதோ மூலையில் எடுக்கப்பட்டது இல்லை. அமெரிக்காவின் பரபரப்பான நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் கடற்படை யார்டில் தான் இந்த படம் எடுக்கப்பட்டன. அந்தப் படம் குறித்தும் எவ்வித தகவல்களும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+