வெறும் ரூ.15 லட்சம் இருந்தால் போதும்.. உங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கலாமாம்.. அது எப்படி தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் வெறும் 15 லட்சம் செலவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா.. அவர் எப்படி இதைச் செய்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
எப்போது புதிதாக ஒரு நாடு உருவாவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. கடந்த காலங்களில் எந்தவொரு நாட்டை எடுத்து நாம் பார்த்தாலும் மிகப் பெரிய போராட்டமும் தியாகங்களும் புதைந்திருக்கும்.

ஆனால், இது எதுவுமே இல்லாமல் ஒருவர் புதிய நாட்டை உருவாக்கிவிட்டாராம்.. தனக்கென இவர் இந்த நாட்டை உருவாக்கியுள்ளார். அதுவும் வெறும் 15 லட்ச ரூபாய் செலவில்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
புது நாடு: டிஜேவாக பணிபுரியும் ராண்டி "ஆர் டப்" வில்லியம்ஸ் என்பவர் தான் இந்த நாட்டை உருவாக்கியுள்ளார். மேலும், தனது நாட்டிற்கு அவர் தி ரிபப்ளிக் ஆஃப் ஸ்லோஜமஸ்தான் (The Republic of Slowjamastan) என்றும் பெயர் வைத்துள்ளார். ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் தான் சென்று வந்துள்ளதாகவும் அதன் பின்னரே தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா மொத்தம் 193 நாடுகளை அங்கீகரித்துள்ள நிலையில், அதில் இறுதி நாடான துர்க்மெனிஸ்தானுக்கு வில்லியம் விரைவில் செல்லவுள்ளார். தான் புதிதாகச் செல்லவும் செட்டில் ஆகவும் ஒரு நாடு தேவை என்பதாலேயே புதிதாக இந்த நாட்டை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார்.
ரூ 15 லட்சம்: புதிதாக நாட்டை உருவாக்க முடிவு செய்த வில்லியம்ஸ், இதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா பாலைவனத்தில் இந்திய மதிப்பில் 15 லட்ச ரூபாய் செலவில் 11.07 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதை தனக்கான புதிய நாடாக அறிவித்த அவர், அங்குள்ள புகழ்பெற்ற ரேடியோ ஷோவை தொடர்ந்து தி ரிபப்ளிக் ஆஃப் ஸ்லோஜமஸ்தான் என்று தனது நாட்டிற்குப் பெயர் வைத்தார்.
இப்போது ஸ்லோஜமஸ்தான் சுல்தானாக வில்லியம்ஸ் தன்னை தானே அறிவித்துக் கொண்டார். ஸ்லோஜமஸ்தான் குடியரசின் தலைநகரான டுப்லாண்டியாவில் தனக்காக ஒரு அலுவலகத்தையும் வைத்துள்ளார். கடந்த 2021 டிசம்பர் 1ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து ஸ்லோஜமஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார்.
அவரது நாடு தனக்கென தனியாக பாஸ்போர்ட்டையும் கொடுக்கிறது. தி டபுள் என்ற நாணயத்தையும் அச்சிடுகிறது.. அவ்வளவு ஏன் தனியாகத் தேசிய கீதத்தையும் வைத்துள்ளனர். இங்கே ஏற்கனவே 500 பேர் குடியுரிமை பெற்று வசிப்பதாகவும் மேலும் 4,500 பேர் குடியுரிமை பெறக் காத்திருப்பதாகவும் வில்லியம் கூறுகிறார்.
எங்கே உள்ளது: இது கலிபோர்னியா ஸ்டேட் ரூட் 78இல் அமைந்துள்ளது, இது சான் டியாகோவின் வடமேற்கே அமைந்துள்ளது. அவர் 2021 ஆகஸ்டில் நெவாடாவில் 11.3 ஏக்கரில் அமைந்துள்ள மொலாசியா என்ற மைக்ரோ நேஷனுக்கு சென்றதாகவும் அதைத் தொடர்ந்து இப்படி தனக்கென ஒரு நாட்டை உருவாக்கம் ஐடியா தனக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அங்கிருந்து வந்ததும் உடனடியாக நிலத்தை வாங்கி தனக்கான நாட்டை அறிவித்துவிட்டார்.
வில்லியம்ஸ் அவ்வப்போது தனது நாட்டில் வாக்குப்பதிவையும் நடத்துவார். இதில் ஆட்சியாளர்கள் எல்லாம் மாற மாட்டார்கள். வில்லியம் தான் எப்போதும் தலைவர். மாறாகத் தேசிய பழம், விளையாட்டு மற்றும் தேசிய விலங்கு உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்ய இதுபோல தேர்தல்கள் நடத்தப்படும்.
மைக்ரோ நேஷன்: இப்படி என்ன தான் பாஸ்போர்ட் தொடங்கி அனைத்தையும் தனியாக வைத்திருந்தாலும் இதை யாரும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. மற்ற நாடுகளோ, ஐநா சபையோ இதைத் தனி நாடாக அறிவிக்கவில்லை.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத பகுதிகள் மைக்ரோ நேஷன் என்று அழைக்கப்படும். அங்கீகரிக்கப்படாத, அதேநேரம் தங்களைச் சுதந்திர நாடாகக் கூறிக் கொள்ளும் பகுதிகள் தான் மைக்ரோ நேஷன் என்று அழைக்கப்படும். உலகெங்கும் இதுபோல பல மைக்ரோ நேஷன்கள் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications