வாட்ஸ்அப் கொண்டு வந்த சூப்பர் மாற்றம்.. இனி எடிட் செய்யலாம்.. கையோடு 'மார்க்' வைத்த செக்!
வாஷிங்டன்: வாட்ஸ்அப் இல் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே மெசேஜை எடிட் செய்ய முடியும் என் மார்க் ஜுக்கர்பெர்க் செக் வைத்துள்ளார்.
மெட்டா நிறுவனரும், அந்நிறுவனத்தன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கோடிக்கணக்கான வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு செய்தியை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மாற்றியமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட் மற்றும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்ஆப் இல் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மெசேஜை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி முதலில் betta வெர்சனாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி உலகம் முழுவதும் பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

எப்படி மெசேஜை திருத்துவது: நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் அது தவறாக இருக்கிறது என்று நினைத்தால், அதை கொஞ்சம் நேரம் கையை வைத்து அழுத்துங்கள். அதாவது லாங்பிரஸ் செய்தால், திருத்து என்ற ஆப்சன் வரும். அதை தேர்ந்தெடுத்து மெசேஜை திருத்திக் கொள்ளலாம். ஆனால் 15 நிமிடங்கள் வரை தான் அதற்கு அனுமதி, அதற்குள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் தவறான மெசேஜ் அனுப்பினால் அதே உடனே delete for every one ஆப்சன் கொடுத்தால் மொத்தமாக போய்விடும்.இதை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இனி திருத்திக்கொள்ளலாம்.
எனவே வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களில் எழுத்துப்பிழைகளை சரி செய்ய மக்களுக்கு இந்த வசதி நிச்சயம் உதவியாக இருக்கும்.அதேநேரம் திருத்தப்பட்ட செய்தி என்பதும் மெசேஜ் அனுப்புபவர்களுக்கு தெரியும்.

கடந்த வாரம், வாட்ஸ்அப் 'Chat Lock' என்ற அம்சத்தை அறிவித்தது, இது வாட்ஸ் அப் பயனாளர்களின் நெருக்கமான உரையாடல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதனை நீங்கள் பத்திரமாக பாதுகாக்க முடியும். யாரும் பார்க்காமல் செய்ய முடியும். பாஸ்வேர்டு அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பார்க்க முடியும். யார் மெசேஜை அப்படி செய்ய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் 'Chat Lock' ஆப்சனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications