டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகுவதால் சீனாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? நச்சென்று 4 பாயிண்ட்கள்
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு அது சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்வி உலகம் முழுக்கவே எதிரொலிக்கிறது. இது தொடர்பாக சில பொருளாதார வல்லுனர்கள் மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களை உற்று நோக்கும் நிபுணர்களிடம் நாம் கருத்து கேட்டோம். அதன் அடிப்படையில் சில தகவல்களை தொகுத்து தருகிறோம்.
சீனாவை டொனால்ட் டிரம்ப் எப்போதுமே ராணுவ எதிரியாக பார்த்தது கிடையாது. பொருளாதார எதிரியாகத்தான் கருதி வருகிறார். முந்தைய முறை அவர் அதிபராக இருந்தபோது, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். அடுத்து வந்த ஜோ பைடன் அரசும் அதில் தலையிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் மிக நுட்பமான அறிவியல் சாதனங்களை அமெரிக்காவிலிருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜோ பைடன் கடும் நிபந்தனைகளை விதித்து இருந்தார்.

சீனா விஷயத்தில் அமெரிக்கா எப்போதுமே எச்சரிக்கையாக நடக்கிறது என்பதற்கு இரு அதிபர்கள் எடுத்த நடவடிக்கையும் நல்ல உதாரணம். எனவே புதிதாக இந்த கெடுபிடியையும் செய்ய வேண்டிய நிலைமையில் டொனால்ட் ட்ரம்ப் அரசு இருக்கப் போவது கிடையாது.
இன்னும் சிறு சதவீதம் அளவுக்கு மட்டும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்திக் கொள்ள முடியும் . தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு இன்னும் சில கட்டுப்பாடுகளை வேண்டுமானால் செய்து கொள்ள முடியும். அதை தாண்டி பெரிய அளவுக்கு கெடுபிடி செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷ்யாவுடன் போரை தொடர வேண்டாம் என்பது, உக்ரைன் அதிபருக்கு டொனால்ட் ட்ரம்ப், கொடுக்கப் போகும் அறிவுரை என்பதால் இந்த போரில் தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று ரஷ்யா நெஞ்சை நிமிர்த்தி அறிவித்துக் கொள்ளும். தங்கள் ஈகோவுக்கு தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ரஷ்யா அதன் வேலையை அது பார்க்க கிளம்பி விடும். அதன் பிறகு ஈரான், சீனா, வடகொரியா போன்ற நாடுகளுடன் மிக நெருங்கிய ராணுவ ரீதியிலான உறவு தொடர வேண்டிய அவசியம் இப்போதைக்கு ரஷ்யாவுக்கு கிடையாது. ஒருவகையில் சீனாவுக்கு இது பாதிப்பு தான். ரஷ்யாவின் நட்பு நாடு என்ற போர்வையில் ராணுவ பயிற்சியிலெல்லாம் பங்கேற்று காலரை தூக்கிவிட்ட சீனாவுக்கு இனி அதற்கான வாய்ப்பை தர ரஷ்யாவுக்கு தேவையில்லாமல் போகக்கூடும்.
சீனா ஆதிக்கம்: தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தன்னை ஒரு வல்லரசாக நிறுவிக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்த பிறகு இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை விழும். உலகின் பெரிய அண்ணன், ஒரே அண்ணன் அமெரிக்காதான் என்பதில் ட்ரம்ப் உறுதியானவர். இந்தியாவுடன் டொனால்ட் ட்ரம்ப் நெருங்கிய உறவை பராமரித்து தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தனது வல்லாதிக்கத்தை செலுத்த முடியாமல் பல தடைகளை போடக்கூடும். இதுவும் இந்தியாவுக்கு நல்லதுதான்.
பணியும் சீனா: சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில் சீனா தனது பொருட்களை இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும். அப்போது இந்தியாவுடன் நல்ல உறவை பராமரித்துதான் ஆக வேண்டிய கட்டாயத்திற்கு சீனா தள்ளப்படும். ஏற்கனவே மெல்ல மெல்ல நல்ல உறவை நோக்கி சீனா திரும்புகிறது என்பதற்கு எல்லையில் நடக்கும் ராணுவ ரோந்து நடவடிக்கைகளே நல்ல உதாரணம்தான்.
ஐரோப்பிய நாடுகள்: ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கச்சா எண்ணெய்க்காக அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே அவர்கள் பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் குழைந்து கொண்டிருந்த நிலை இருக்காது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவுடன் நல்ல உறவை பராமரித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஐரோப்பிய நாடுகள் இருக்க மாட்டார்கள். சீன பொருட்கள் மீது வரியை ஏற்றாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் ஐரோப்பிய நாடுகளுக்கு இருக்காது.
இந்தியாவுக்கு லாபம்: அமெரிக்கா, ஐரோப்பாவை தாண்டி, மிச்சமிருக்கும் பெரிய சந்தை இந்தியாதான். சீன பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் தாங்கிப்பிடிக்க இந்திய சந்தைதான் முக்கியமான இடம். கொரோனா காலத்தில் உற்பத்தி செய்து குவிக்கப்பட்ட கார்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு தேங்கி கிடக்கின்றன. யார் தலையில் கட்டலாம் என்று சீனா சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே நம்மிடம் சீனா இனிமேல் வாலாட்டாது என்று உறுதியாக நம்பலாம். இது தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்ட உதவுவதோடு, நமக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உருவாகும். அதேநேரம், சீன விஷயத்தில் ட்ரம்ப் போலவே பிடிவாதமானவர் பிரதமர் மோடி. சீன பொருட்களுக்கு சந்தையை திறந்துவிடாமல் இருந்தால் சீனாவுக்கு கஷ்டம்தான். இந்தியா இனி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதுதான், சீன சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வித்திடப்போகிறது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications