நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி எடுப்பதால்.. ஒரு பக்கமாக சாய தொடங்கும் பூமி.. ஷாக் ஆய்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்த காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறார்கள். இதனால் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நிலத்தடி நீரை எடுக்கப் போர் போடப்படுகிறது. ஆனால், இதுபோல அதிகப்படியாக நிலத்தடி நீரைப் பிரித்தெடுப்பதால் பூமியின் ஆக்சிஸில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் வானிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதீத வெப்பம், திடீரென கொட்டி தீர்க்கும் மழை போன்ற வானிலை நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன.

science earth

நீர்: இதனால் நமக்குத் தேவையான நீர் கிடைக்காத சூழலே ஏற்படுகிறது. இதுபோன்ற காலங்களில் நாம் போர் போட்டு நிலத்திற்கு அடியில் இருந்து நீரை எடுப்போம். முன்பெல்லாம் நகரங்களில் மட்டுமே இதுபோல போர் போட்டு தண்ணீர் எடுத்து வந்தார்கள். ஆனால், இப்போது சின்ன சின்ன கிராமங்களிலும் கூட நீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போர் போட்டே நீர் எடுக்கிறார்கள்.

100 அடி, 200 அடி என்று முதலில் போர் போட்டுக் கொண்டு இருந்தது மாறி இப்போது 1000 அடி, 2000 அடி வரை கூட போர் போடுகிறார்கள். இதுபோல தொடர்ச்சியாக நாம் போர் போட்டு தண்ணீர் எடுத்தால் சீக்கிரமே நிலத்தடி நீர் என்பதே இல்லாமல் போய்விடும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். ஆனால், அந்த எச்சரிக்கையை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து போர் போட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

எச்சரிக்கை: இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சியோல் நேஷ்னல் யூனிவர்சிட்டி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அதிகப்படியாகப் போர் போட்டு நீரை உறிஞ்சுவதால் அது பூமியின் இயக்கவியலைப் பாதிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அதிகப்படியான நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் அது பூமியின் சுழற்சி துருவத்தைப் பாதிப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1993 முதல் 2010 வரையிலான 20 ஆண்டுகளில் மட்டும் நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சி எடுப்பதால் பூமியின் துருவமானது கிழக்கு நோக்கி சுமார் 80 சென்டிமீட்டர்கள் நகர்ந்ததாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் நாம் சுமார் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துள்ளதாகவும் அதில் கூறுகிறார்கள்.

ஆபத்து: இந்தளவுக்கு நாம் நீரை வெளியேற்றியதால் கடல் மட்டம் சுமார் 0.24 அங்குலம் வரை உயர்ந்துள்ள நிலையில், இதனால் பூமியின் ஆக்சிஸ் வருடத்திற்கு 4.36 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் நகர்ந்து இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பூமியின் எடையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்த துருவ இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்.. நிலத்தடி நீரை எடுத்து அதை நாம் பயன்படுத்துகிறோம். அது கழிவாக மீண்டும் கடலில் தான் போய்ச் சேர்கிறது. இதனால் தான் துருவ இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பனிக்கட்டி உருகுதல் போன்றவற்றைக் காட்டிலும் நிலத்தடி நீரை எடுப்பதால் துருவ இயக்கம் அதிகம் மாறி இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியா: குறிப்பாக மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளில் தான் நிலத்தடி நீர் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனரே. இது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இந்த சிக்கலைச் சரி செய்ய உலக நாடுகள் இணைந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+