"உடலுறவு.." டேட் செய்ய ஏஐ குளோனிங் மாடல்! அப்படியே குவிந்த 1,000 பேர்! வாயை பிளக்க வைக்கும் கட்டணம்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மாடல் ஒருவர், தன்னை போன்ற ஒரு ஏஐ மாடலை உருவாக்கி அதை டேட்டிங் செய்ய வாடகைக்கு விட்டுள்ளார். இதற்கு அங்கே வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம்.
இப்போது உலகெங்கும் ஏஐ குறித்தே பேச்சாக இருக்கிறது. இந்த காலம் என்பது ஏஐ துறைக்கான காலம் என்பதை நாம் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். அதிலும் சாட் ஜிபிடிக்கு பிறகு ஏஐ துறை வேற லெவலில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
சாட் ஜிபிடி ஏஐ கருவி என்பது நாம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும்.. கேள்வி மட்டுமின்றி கவிதை கேட்டால் கவிதை சொல்லும், அவ்வளவு ஏன் காதல் கடிதம் கேட்டால் அதையும் கூட எழுதித் தரும். அந்தளவுக்கு மேம்பட்ட ஒன்றாகவே ஏஐ இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம்: இந்த ஏஐ தொழில்நுட்பத்தை இங்கே மக்கள் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் படங்கள் பல நேரங்களில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இதுபோன்ற படங்கள் உண்மை என்றே நம்பிவிடுகிறார்கள். அந்தளவுக்குத் தத்ரூபமாகவே இந்த ஏஐ படங்கள் இருக்கிறது. நாம் சொல்லவில்லை என்றால் இது அசல் படம் என்றும் நம்பும் அளவுக்கே ஏஐ படங்கள் இருக்கிறது.
இதற்கிடையே அதுபோன்ற ஒரு படம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே இணையத்தில் பேமஸாக உள்ள ஒரு பெண் பிரபலம் ஏஐ மூலம் படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இந்த பிரபலம் 1,000 பாய் பிரண்ட்களை பெற்றுள்ளார். இதனிடையே அவர் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தன்னை தானே குளோன் செய்துள்ளார்.

நிமிடத்திற்கு 80 ரூபாய்: மேலும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த குளோனை டேட் செய்ய நிமிடத்திற்கு $1 (ரூ. 80) வசூலிக்கவும் செய்கிறாராம். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கம்மிங்கைச் சேர்ந்தவர் கேரின் மார்ஜோரி.. 23 வயதான இவர், ஸ்னாப்சாட் தளத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பலோயர்ஸ்களை கொண்டிருக்கிறார்.
அவரது பல பலோயர்யஸ்கள் அவர் மீது அதீத அன்பை வைத்துள்ளனர். அனைவரும் கேரின் மார்ஜோரி உடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் பலோயர்ஸ்கள் பலரும் சோகமடைந்து விடுவார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வைக் கொண்டு வந்துள்ள அவர், இதற்காகத் தனது பலோயர்ஸ்கள் தன்னை டேட்டிங் செய்ய அனுமதிக்கும் ஒரு ஏஐ குளோனை உருவாக்கினார்.
அவர் CarynAI என்ற ஏஐ தளத்தைப் பயன்படுத்திப் படத்தை உருவாக்கியுள்ளார். இவர் இந்த ஏஐ உடன் பல ஆயிரம் மணி நேரம் பேசி, தன்னை போலவே சிந்திப்பது போன்ற ஏஐ கருவியை உருவாக்கியுள்ளார். இந்த மாடலின் ஏஐ குளோன் அனைத்து விஷயங்கள் குறித்தும் டேட்டிங் செய்யும் நபருடன் பேசுமாம். உடலுறவு உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் இந்த குளோன் மாடல் பேசும் வகையில் உருவாக்கியுள்ளார்.

ஆயிரம் பாய் பிரண்ட்கள்: ஒருவருக்கு எப்போது தேவையோ அப்போது கட்டணம் செலுத்தி இந்த குளோன் மாடலுடன் டேட் செய்து கொள்ளலாம்.. இதற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு டாலர் அதாவது 80 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார். இப்படி எல்லாம் கட்டணம் செலுத்தி யார் டேட்டிங் செய்வார் என்று நினைக்க வேண்டாம். இப்போதே சுமார் ஆயிரம் பாய் பிரண்ட்கள் அந்த குளோன் மாடலை டேட் செய்கிறார்களாம்.
இது குறித்து அவர் கூறுகையில், "உங்களுக்கு ஆறுதலாகவோ அல்லது அன்பாகவோ இருக்க யாரேனும் தேவைப்பட்டால்.. பள்ளியில் அல்லது பணியிடத்தில் நடந்த ஏதாவது ஒன்றைப் பற்றி நீங்கள் பகிர அலற விரும்பினாலும், எனது குளோன் ஏஐ எப்போதும் உங்களுக்காக இருக்கும்" என்கிறார் அவர்.

58 லட்சம் வருவாய்: இந்த குளோன் உடன் டேட் செய்யும் 99% ஆண்கள் தானாம். இந்த ஏஐ போட் சில நாட்களில் $71,610 (ரூ 58.7 லட்சம்) சம்பாதித்துள்ளது. தனது 18 லட்சம் பாலோயர்ஸ்களில் 20,000 பேர் பின்தொடர்ந்தாலே ஒரு மாதத்திற்கு 50 லட்சம் டாலரை சம்பாதிக்க முடியும் என்கிறார் அவர். இதற்காக ஃபாரெவர் என்ற வாய்ஸ் தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.
2017இல் உயிரிழந்த தனது தந்தையின் நினைவாக அவரது குரலை பாரெவர் என்ற நிறுவனம் மூலம் உருவாக்கினார் அதன் நிறுவனர் ஜான் மேயர். இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் ஆடியோ வீடியோக்களை ஆய்வு செய்து குரலைத் தத்ரூபமாக உருவாக்க முடியும். இப்போது அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் கேரின் மார்ஜோரி தனது ஏஐ குளோனிற்கான வாய்ஸை உருவாக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications