ஒரே ஒரு வீடியோ.. 2 கோடியை மிஸ்டர் பீஸ்டுக்கு அள்ளி கொடுத்த எலான் மஸ்க்.. ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட்
வாஷிங்டன்: பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தின் மூலம் வெறும் 8 நாட்களில் இரண்டு கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். அவர் எப்படி இதுபோல செய்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ட்விட்டர் தளத்தை வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் எதன் பெயரை எக்ஸ் என்று மாற்றி நடத்தி வருகிறார். யூசர்களை அதிகரிக்கவும் வருவாயைப் பெருக்கவும் எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கொட்டிய வருமானம்: இதற்கிடையே பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் (MrBeast) எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ 8 நாட்களில் 161 மில்லியன் வியூஸ்கலை பெற்ற நிலையில், அதற்குக் கோடிக் கணக்கில் வருமானம் பெற்றுள்ளார். ஒரு டாலர் vs 100,000,000 டாலர் கார் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு சுமார் $2,50,000 டாலர் (சுமார் ₹ 2 கோடி) வருமானம் சென்றுள்ளது.
ஒரே ஒரு வீடியோவுக்கு இத்தனை பணமா.. அப்போ அதில் வீடியோ போட்டால் பல லட்சம் சம்பாதிக்க முடியும் போலவே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அது குறித்தும் இதே மிஸ்டர் பீஸ்ட் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது முதல் எக்ஸ் வீடியோ $ 250,000 (சுமார் 2 கோடி) ஈட்டியுள்ளது. ஆனால், அது அனைவருக்கும் இது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.
ட்விஸ்ட்: எக்ஸ் தளத்தில் விளம்பரப்படுத்துவோர் எனது வீடியோவை கவனித்து அதில் விளம்பரப்படுத்த முன்வந்துள்ளனர். இதன் காரணமாகவே எனது வருவாய் உங்கள் வருவாயைக் காட்டிலும் அதிகமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்த ஒரு வீடியோ மூலம் 2.63 லட்சம் டாலர், அதாவது 2 கோடி ரூபாய் சம்பாதிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த பணத்தை 10 பேருக்குப் பிரித்துக் கொடுப்பதாகவும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் மிஸ்டர் பீஸ்டின் இந்த வீடியோ பலருக்குக் காண்பிக்கப்பட்டதாகவும் அதில் விளம்பரங்கள் அதிகமாகவே இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
இப்போது இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பணம் ஈட்டுவது என்பதைப் பலரும் வேலையாகவே செய்து வருகின்றனர். அதில் யூடியூப் தான் இப்போது பிரதானமாக இருக்கிறது. ஆன்லைனில் வீடியோ போடுபவர்கள் யூடியூப்பை மட்டுமே முக்கியமாக வருவாய்க்கு நம்பி இருக்கிறார்கள். அதேபோல சந்தை பெரும்பாலும் யூடியூப் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதற்குப் போட்டியாகவே இப்போது எக்ஸ் தளம் வந்துள்ளது.
யூடியூப் தளத்தைப் பொறுத்தவரை நீங்கள் பணம் சம்பாதிக்க உங்கள் சேனல் 1000 சப்ஸ்கிரைபஸ் மற்றும் 4000 பார்வை நேரத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், எக்ஸ் தளத்தைப் பொறுத்தவரை நீங்கள் அதற்கும் பணம் கட்ட வேண்டும். அதாவது உங்கள் வீடியோவின் விளம்பரம் மூலம் நீங்கள் வருமானம் பெறவே கட்டணம் செலுத்த வேண்டும். ப்ரிமியம் யூசர் 8 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்போது தான் வருமானம் உங்களுக்கும் கிடைக்கும்.
மிஸ்டர் மீஸ்ட் கடந்த ஜூன் 2022 மற்றும் ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தில்$82 மில்லியன், அதாவது 681 கோடி ரூபாயைச் சம்பாதித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதைத் தவிர அவர் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். அவர் சம்பாதிக்கும் பெரும்பாலான பணத்தை சமூக சேவைகளுக்குச் செலவிட்டு விடுவார். சமீபத்தில் கூட ஆப்பிரிக்க நாட்டில் மக்கள் உதவிக்காகப் பல நூறு இடங்களில் அவர் இலவசமாகப் போர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications