கண்ணை மூடி திறந்தால் ரூ.2.46 லட்சம்.. இதுதான் எலான் மஸ்க் சம்பளம்! பல நாடுகளின் ஜிடிபியை விட அதிகம்
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் எலான் மஸ்கிற்கான புதிய சம்பள பேக்கேஜ்ஜிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த புதிய சம்பளத்தின்படி எலான் மஸ்கிற்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.1.48 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும், அவரது சம்பளம் 170+ நாடுகளின் ஜிடிபியை விடவும் கூட அதிகமாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இப்போது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ட்விட்டர் எனப் பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கிடையே எலான் மஸ்க்கிற்கு டெஸ்லா சிஇஓ பதவிக்காகப் புதிய சம்பள பேக்கேஜ்ஜிற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ்ஜின்படி அவருக்கு ஒரு டிரில்லியன், அதாவது ரூ.88.69 லட்சம் கோடி ஊதியமாகக் கிடைக்கும்.

எலான் மஸ்க்
இதன் மூலம் உலகிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் சிஇஓ என்ற சாதனையை அவர் படைக்கிறார். அதேநேரம் இந்த ஒரு டிரில்லியன் டாலர் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்து வழங்கப்படும். எனவே, பணவீக்கத்தைச் சேர்த்துக் கணக்கிட்டால் அதன் மதிப்பு 878 பில்லியன் டாலராக குறைந்திருக்கும். ஆனாலும், அதுவும் கூட மிகப் பெரிய தொகை தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
எவ்வளவு சம்பளம்
மேலும், அவருக்குப் புதிய சம்பள பேக்கேஜ் அடிப்படையில், ஒரு நாளைக்கு 240.5 மில்லின், அதாவது ரூ.2100 கோடி கிடைக்கும். ஒரு நிமிடத்திற்கு 1.67 லட்சம் டாலர், அதாவது ரூ.1.48 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் எலான் மஸ்க் ஒவ்வொரு நொடியும் 2748 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.46 லட்சம் சம்பளமாகப் பெறப் போகிறார்
எலான் மஸ்க் இந்த பேக்கேஜ்ஜை வைத்து சவுதி அரேபியா அல்லது நெதர்லாந்து நாட்டை கூட வாங்கலாம்.. இரு நாடுகளின் ஜிடிபி சுமார் $1.2 டிரில்லியன் ஆகும். இந்தச் சம்பளத்துடன் கூட கொஞ்சம் தொகையைக் கொடுத்தால் எலான் மஸ்க்கால் இந்த இரு நாட்டில் எதாவது ஒரு நாட்டை கூட வாங்கவிட முடியும். அப்படி இல்லை என்றால் சிங்கப்பூர் ($0.54 டிரில்லியன்) மற்றும் இஸ்ரேல் ($0.54 டிரில்லியன்) ஆகிய இரு நாடுகளையும் கூட அவர் நினைத்தால் வாங்கலாம்.
170 நாடுகளின் ஜிடிபியை விட அதிகம்
உலக நாடுகளில் சுமார் 19 நாடுகளின் ஜிடிபி மட்டுமே $1 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறது. 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஜிடிபி இதை விடக் குறைவாகவே இருக்கிறது. அதாவது எலான் மஸ்க் என்ற ஒரு நபரின் சம்பளம் உலகின் 170 நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட அதிகமாகும்.
ஒரு செக்
அதேநேரம் நாம் இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது எலான் மஸ்க்கிற்கு எடுத்தவுடன் இந்த சம்பளத்தைக் கொடுத்துவிட மாட்டார்கள். டெஸ்லா சில குறிப்பிடத்தக்க மைல்கல்லைத் தொட்டால் மட்டுமே எலான் மஸ்கிற்கு இந்தச் சம்பளம் கிடைக்கும். குறிப்பாக டெஸ்லாவின் சந்தை மதிப்பு இப்போது 1.5 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், அதை 8.5 டிரில்லின் டாலராக உயர்த்த வேண்டும்.
2 டிரில்லியன் முதல் ஒவ்வொரு முறையும், அதன் மதிப்பு குறிப்பிட்ட அளவுக்கு உயரும்போதும் எலான் மஸ்கிற்கு சம்பளம் கிடைக்கும். இதுபோக அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி மின்சார வாகனங்கள், சுமார் 10 லட்சம் ரோபோடாக்சிகள், 10 லட்சம் ஆப்டிமஸ் ஹ்யூமனாய்டு ரோபோக்கள் என வேறு சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அவை அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே எலான் மஸ்கிற்கு இந்த ஊதியம் கிடைக்கும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications