30,300 கோடி பேரல்கள்! சவுதியை விட அதிக எண்ணெய் வளம்! வெனிசுலா பக்கம் டிரம்ப் பார்வை திரும்பியது ஏன்?
வாஷிங்டன்: வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா அதை நிர்வகிக்கும் என்றும் அதன் எண்ணெய் இருப்பை பிற நாடுகளுக்கு விற்கும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். நிகோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் நாடுகடத்தப்பட்ட சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெனிசுலாவிடம் உண்மையில் எந்தளவுக்கு எண்ணெய் வளம் இருக்கிறது. டிரம்ப் வெனிசுலா பக்கம் கவனத்தைத் திருப்ப என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நேற்றைய தினம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் திடீரெனத் தாக்குதலை நடத்தியது. வெனிசுலாவை தாக்கியதோடு மட்டுமின்றி, அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி நாடுகடத்தப்பட்டனர். இதை டிரம்ப் அதிகாரப்பூர்வமாகவே உறுதி செய்தார். வெனிசுலா பக்கம் டிரம்ப் தனது பார்வையைத் திருப்ப என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!

வெனிசுலா
உலகிலேயே அதிக எண்ணெய் கையிருப்புள்ள நாடு வெனிசுலா. இந்த ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்காவுக்கு ஒரு பைசா கூட செலவாகாது என்றும் அங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணமே போதுமானதாக இருக்கும் என்பது போலவும் டிரம்ப் கூறியிருந்தார். வெனிசுலாவின் அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளுக்கும் அமெரிக்கா விதித்துள்ள தடை முழுமையாக அமலில் உள்ளது. இப்போது அமெரிக்கா கட்டுப்பாட்டில் வெனிசுலா சென்றுள்ள நிலையில், தடைகள் நீக்கப்படும் எனத் தெரிகிறது.
வெனிசுலா கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்த டிரம்ப் விரும்பினாலும், அங்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இல்லை. எனவே, உட்கட்டமைப்பை மேம்படுத்தி, முதலீட்டை ஏற்பாடு செய்யப் பல ஆண்டுகள் ஆகலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதற்குப் பல பில்லியன் டாலர்கள் வரை தேவைப்படலாம் என்று தேர்ட் பிரிட்ஜ் நிறுவனத்தின் பீட்டர் மெக்னலி குறிப்பிட்டார்.
எண்ணெய் இருப்பு
உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 17%, அதாவது 303 பில்லியன் பீப்பாய்கள் வெனிசுலாவிடம் இருக்கிறது. 1970களில் உலகளவில் அதிகக் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தினசரி 3.5 மில்லியன் பீப்பாய்கள் வரை வெனிசுலா உற்பத்தி செய்தது. ஆனால், கடந்த ஆண்டு அது ஒரு நாளைக்குச் சராசரியாக 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்து. அதாவது சர்வதேச அளவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யில் 1% மட்டுமே இப்போது வெனிசுலாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த காலம்
ஒரு காலத்தில் வெனிசுலாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தது. இருப்பினும், வெனிசுலாவில் சர்வாதிகார ஆட்சி அமைந்து, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் பிறகு வெனிசுலாவில் இருந்து சீனாவே கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது.
நிலைமை மாறுமா
கச்சா எண்ணெய் என்ற ஒரே வளத்தை வைத்து சவுதி, ஐக்கிய அமீரகம் வேற லெவலில் வளர்ந்தது. ஆனால், ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக வெனிசுலாவிடம் வளங்கள் இருந்தாலும் வளர்ச்சியை அடைய முடியவில்லை. அதன் எண்ணெய் இருப்பு பெரும்பாலும் மத்திய வெனிசுலாவின் ஓரினோகோ (Orinoco) பகுதியில் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக அங்கிருந்து அதிகக் கச்சா எண்ணெய்யை ஈஸியாக எடுக்கலாம். இந்தச் சூழலில் தான் டிரம்ப் அங்குத் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications