நீங்கள் சாகும் நாளை துல்லியமாக சொல்லும் AI.. ஆர்வமாக டவுன்லோடு செய்யும் மக்கள்! ஆனால் காரணமே வேற
வாஷிங்டன்: சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று ஒரு படத்தில் வசனம் வரும். அது உண்மையும் கூட. ஆனால், இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏஐ டூல் மூலம் ஒருவரது ஆயுட்காலம் எவ்வளவு அவர் எப்போது உயிரிழப்பார் உள்ளிட்ட தகவல்களைத் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறதாம். அந்த செயலி தான் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்த காலத்தில் எங்கும் ஏஐ.. எதிலும் ஏஐ என்று சொல்லும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது. ஏஐ தொழில்நுட்பம் இப்போது தொடக்கக் காலத்தில் இருந்தாலும் கூட அதன் திறன்கள் இப்போதே நம்மை வியக்க வைக்கிறது.

குறிப்பாக சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் ஏஐ உள்ளே புகுந்து கலக்கி வருகிறது. இதற்கிடையே இப்போது மரணத்தைக் கணிப்பதிலும் இப்போது ஏஐ வந்துவிட்டது.
டெத் கிளாக்: செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டெத் கிளாக் (Death Clock) என்ற செயலி மரணத்தைத் துல்லியமாகக் கணிக்கிறதாம். இது ஏதோ ஜாதகம் பார்த்து அல்லது மேஜிக் செய்தே எப்போது உயிரிழப்போம் என்பதைக் கண்டுபிடிக்கும் என்று நினைக்காதீர்கள். இது முழுக்க முழுக்க சயின்ஸ் அடிப்படையில் தான் இயங்குகிறது. அதாவது யூசர்களின் வாழ்க்கை முறையை வைத்து, அதை ஆய்வு செய்தே எப்போது உயிரிழப்போம் என்பதை இது கணிக்கிறது. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த செயலியை இப்போது வரை சுமார் 1.25 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.
மோசமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்றினால் சரியான நேரத்தில் அது நம்மை எச்சரிக்கும். இதன் மூலம் நாம் நமது உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, பொருளாதார திட்டங்களையும் அதற்கேற்ப உருவாக்கிக் கொள்ள முடியும். பிரென்ட் ஃபிரான்சன் என்ற நிறுவனம் தான் இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
எப்படிக் கணிக்கிறது: ஆயுட்காலம் குறித்த 1,200க்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகள், 5.3 கோடி மக்களின் வாழ்க்கை முறையை வைத்து இந்த ஏஐ டூலை டிசைன் செய்துள்ளனர். இவ்வளவு டேட்டாவை கொண்டு பயிற்சி தரப்பட்டுள்ளதால் இதன் கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் தூக்க முறைகள் உள்ளிட்டவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டே இது ஒருவரது ஆயுட்காலத்தைக் கணிக்கிறது.
செம ஹிட்: இந்த செயலியின் கான்செப்ட்டே கூட நம்மை அச்சமூட்டுவதாக இருந்தாலும் கூட இது ப்ளே ஸ்டோரில் ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் பிரிவில் டாப் இடத்தில் இருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வு செய்ய இந்த செயலி உதவுவதால் பலரும் இதை ஆர்வமாக டவன்லோட் செய்து யூஸ் செய்கிறார்கள்.
காரணமே வேற: மரணத்தைத் தெரிந்து கொள்வது ஆர்வமாக இருந்தாலும், அதைத் தாண்டி இது மற்றொரு விஷயத்திற்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதாவது நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க இது பெரியளவில் உதவுகிறதாம் ஓய்வூதிய வருமானம் எந்தளவுக்கு இருக்க வேண்டும்.. லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ் என அனைத்துக்குமே இந்த டெத் களாக் டூல் ரொம்பவே உதவுவதாகக் கூறப்படுகிறது.
நல்ல மேட்டர் தான்.. உடனே மொபைலை எடுத்து நானும் செக் பண்ணிப் பார்க்கிறேன் என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், சிக்கல் என்னவென்றால் இந்த செயலியை இப்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்த முடியும். அமெரிக்காவுக்கு வெளியே இந்த செயலி ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மனிதர்களை மிஞ்சும் AI? தனக்குத்தானே வாரிசை உருவாக்குதாம்.. மிக அருகே வந்துவிட்டது பேரழிவு! -
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications